Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மறுத்த விஜயகாந்த்.. 1 கோடி கொடுத்தும் விளம்பரத்திலும் நடிக்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடி கோடியாக சம்பாதித்து பட வெற்றி விழா பார்ட்டி என்றால் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாட்டாராம். அதே போல கோடி ரூபாய் கொடுத்தும் விளம்பர படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம் விஜயகாந்த்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்தாலும் பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லையாம். அவர் மறைவிற்குப் பிறகு அவரது நண்பர்கள், அவருடன் பழகிய பலரும் விஜயகாந்த் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

Vijayakanth Flash back: Vijayakanth refused to eat at five star hotel

சோப்பு பவுடர் விளம்பரத்திற்கு வரும் டீஷர்ட் போட்டு இருப்பார் விஜயகாந்த். அவர் தனது வாழ்நாளில் பிராண்டட் ஷர்ட் போட்டது இல்லை. லைஃபில் கடைசி வரை விஜயகாந்த் 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டது இல்லை" என்று ஒருவர் கூறுகிறார்.

கேப்டன் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை, 15 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் கோடிக்கணக்கான மக்களை சம்பாதித்து வைத்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்த போதே அவர்கள் இருவருக்கும் எதிராக அரசியல் செய்தவர் விஜயகாந்த்.

சினிமாவிலும், அரசியல் மேடைகளிலும் கம்பீரமாக வலம் வந்த விஜயகாந்த், உடல் நலக்குறைவினால் கடைசி காலத்தில் தளர்ந்து போய் காணப்பட்டார். திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார் விஜயகாந்த். அவரது மரணம் பல லட்சக்கணக்காண மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்றைக்கு சினிமா நடிகர்கள் பலரும் விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபல குளிர்பான நிறுவனம் ஒன்று அவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து விளம்பர படத்தில் நடிக்க அழைப்பு விடுத்த போது அதனை ஏற்க மறுத்து விட்டாராம்.

அதே போல விஜயகாந்த் எப்போது பிராண்டட் உடைகளை அணிய விரும்புவதில்லை என்று அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். சினிமாவில் நடித்து பெரிய வெற்றி பெற்ற போது கூட அவரது உணவு பழக்கம் மாறவில்லை. பெரிய ஸ்டார் ஹோட்டல்களில் விருந்து வைத்தால் அங்கு சாப்பிட மாட்டாராம். விஜயகாந்திற்கு அசைவ உணவு ரொம்பவே பிடிக்கும். சூட்டிங் ஸ்பாட்டில் நாட்டுக்கோழி குழம்பு, மீன் சாப்பிடுவாராம். தனக்கு கிடைக்கும் உணவு போலவே தன்னுடன் வேலை செய்பவர்களுக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர்.

விஜயகாந்த் மரணத்திற்குப் பிறகு பலரும் அவரது வள்ளல் தன்மை, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர், கர்ணன் என்றெல்லாம் போற்றுகின்றனர். பசித்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு கொடுத்த விஜயகாந்த். அவரது மரணத்திற்குப் பிறகும் விஜயகாந்த் பலராலும் நினைவு கூறப்படுகிறார் என்றால் அது அவரது வள்ளல்தன்மையினால்தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+