இப்ப கூட போயி.. விஜயகாந்தை "அவர்" பார்க்கலயே.. என்னவா இருக்கும்? அதைவிடுங்க, "உருகியது" யார் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் விஜயகாந்த், பூரண உடல் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரார்த்தனை செய்யப்பட்டு வரும்நிலையில், ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சில ஆண்டுகளாகவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளது.. இந்நிலையில், கடந்த 18ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு காரணமாக, சென்னையில் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் விஜயகாந்த்.

Vijayakanth Health: Actor Vijay Fans pray for DMDK Leader Vijayakanth in Trichy District

சிகிச்சை: நுரையீரலில் அவருக்கு பிரச்சினை இருப்பதால் அதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. விஜயகாந்த்துக்கு நுரையீரலுக்கான சிகிச்சை வழங்கப்பட வேண்டும். இதனால் அவர் 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்" என்று மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

எனினும், விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் தரப்படுகிறது என்றும், டிரக்கியாஸ்டமி சிகிச்சை தரப்படுகிறது என்றும் மாறி மாறி தகவல்கள் வருகின்றன.. ஆனாலும் எந்த மாதிரியான சிகிச்சை அவருக்கு தரப்படுகிறது என்பது குறித்து மருத்துவமனை அதிகாரபூர்வமாக எதையும் சொல்லவில்லை.

பாதிப்பு: விஜயகாந்த்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை கேள்விப்பட்டு, தேமுதிக ரசிகர்களும் தொண்டர்களும் மட்டுமல்லாமல், தமிழக மக்களே வேதனை அடைந்தனர்.. இதையடுத்து, விஜயகாந்த் உடல்நல பெற வேண்டும் என்று, பல்வேறு கோயில்களில் பிரார்த்தனைகளை செய்து வருகிறார்கள்..

தங்களது கட்சி தலைவருக்கோ அல்லது தங்களது அபிமான நடிகருக்கோ, பிரார்த்தனைகள் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால், விஜயகாந்த்துக்காக, விஜய் ரசிகர்கர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

ரசிகர்கள்: விஜய் ரசிகர் மன்றத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்ஆர்.கே.ராஜா தலைமையில், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோயிலிலும், பிரம்மன் சன்னதியிலும் விஜயகாந்த் சித்திரை நட்சத்திரத்தில் அவருடைய பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.. விஜயகாந்த் மீண்டும் மக்கள் பணியாற்ற வரவேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை செய்தனர்.

விஜய் ரசிகர்களே இப்படி களத்தில் இறங்கி அவருக்காக வேண்டுதல் செய்துள்ளது நெகிழ்ச்சியை தந்துள்ளது.. ஆனாலும், நடிகர் விஜய், விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையோ அல்லது நேரில் சென்று விசாரிக்காததோ ஏன்? என்று நெட்டிசன்கள் மீண்டும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிறந்தநாள்: இப்படித்தான் விஜயகாந்த் பிறந்தநாள் அன்றும், நடிகர் விஜய் ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை.. எப்போதுமே தலைவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லாத விஜய், சமீபகாலமாகவே, அதாவது அரசியல் பணிகள் வேகம் எடுத்துள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளனுக்கும், பாமக தலைவர் அன்புமணிக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார்.

குறிப்பிட்ட ஒரு சமூக கட்டமைப்பிற்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது, எல்லா சமூகமும், சமூகத் தலைவர்களும் தனக்கு ஒன்றுதான். எல்லோர் மீதும் தனக்கு மரியாதை உண்டு என நிரூபிக்கவே அன்புமணி, திருமா என இருவருக்குமே விஜய் வாழ்த்து சொன்னதாக தகவல் வெளியாகியிருந்தது.

வாழ்த்துக்கள்: ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது வரவேற்கத்தக்கது என்றாலும், இதுபோன்ற பிறந்தநாள் வாழ்த்தை, விஜயகாந்த்துக்கும் சொல்லியிருக்கலாமே? விஜயகாந்த் என்ற மாபெரும் மனிதர் மட்டும் அன்று இல்லாவிட்டால், இன்று விஜய் என்ற மிகப்பெரிய நடிகர் தமிழகத்துக்கு கிடைத்திருக்க மாட்டாரே? என்ற கேள்விகள் இணையத்தை துளைத்தெடுத்தன.

இதே கேள்விகள்தான் இன்னமும் துளைத்து கொண்டிருக்கிறது.. விஜயகாந்த் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையோ அல்லது நேரில் சென்று விசாரிக்காததோ ஏன் என்று கேட்கிறார்கள்.. ஆனாலும், விஜயகாந்துக்காக, இன்று விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை செய்திருப்பது, பலரையும் மனமுருக செய்து வருகிறது.. நெகிழ செய்து வருகிறது.!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+