சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

16-இல் சென்னை திரும்புகிறார் விஜயகாந்த்.. மக்களவை தேர்தல் கூட்டணியை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகம் திரும்புகிறார் விஜயகாந்த்.. கூட்டணியை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு!

    சென்னை: அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    தேமுதிக பொதுச் செயலாளரான விஜயகாந்த் குரல் வள பிரச்சினை மற்றும் தைராய்டு பிரச்சினைகளுக்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் டிசம்பர் 18-ஆம் தேதி தனது மனைவி பிரேமலதாவுடன் சென்றிருந்தார்.

    வதந்தி

    வதந்தி

    அங்கு அவரது உடல்நிலை மோசமாக இருந்ததாக தகவல் பரவியது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, விஜயகாந்துக்கு உடல் நிலை மோசம் என்ற செய்தி வதந்தியாகும் என கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    நிம்மதி

    நிம்மதி

    அமெரிக்காவிலேயே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், திருமண நாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பிறகுதான் தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

    அறிவிப்பு

    அறிவிப்பு

    மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதிமுக-பாஜக - தேமுதிக கூட்டணி அமையும் என தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் கூட்டணி குறித்து எல் கே சுதீஷுடம் கேட்டபோது விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார்.

    ஓரிரு நாளில்

    ஓரிரு நாளில்

    அந்த வகையில் விஜயகாந்த் நாளை மறுநாள் அதாவது சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார். அவர் உடல்நலமுடன் உள்ளார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் வந்தவுடன் ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

    English summary
    Vijayakant is returning to Chennai on day after tomorrow. Here are expectations about his annoucement on Loksabha election alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X