அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும்வரை சாதியை ஒழிக்கமுடியாது.. நாங்குநேரி கொடூரம்.. விஜயகாந்த் ஆவேசம்
சென்னை: நாங்குநேரியில் சாதி வெறியால் 12ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவர் சின்னதுரையும் அவரது தங்கையும் வெட்டப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களிடையே சாதி வன்மமும், ஆயுத கலாச்சாரமும் தலை தூக்குவதை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் தலைவர்கள் மத்தியில் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரது சகோதரி மீது, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் நாங்குநேரியில் முன் விரோதம் காரணமாக விவசாயி வானுமாமலை என்பவரின், பெட்டிக்கடைக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் தீ வைத்து சேதப்படுத்தியதுடன், 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்றது. கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி - நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12ம் வகுப்பு மாணவன்
— Vijayakant (@iVijayakant) August 13, 2023
சின்னதுரையை அதே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். pic.twitter.com/ASzZTCwdjJ
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications