திமுக அறக்கட்டளை நிதியில் பேனா நினைவுச் சின்னம் கட்டுங்க.. மக்கள் பணம் எதற்கு? விஜயபிரபாகரன் பேச்சு!
அரசு சார்பில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதற்கு விஜய பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா நினைவுச் சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் அமைப்பது தவறான விஷயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அந்தவகையில், தேமுதிகவும் இந்த பேனார் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு, கடந்த ஆண்டு முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

பேனா சின்னம்
சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்துப் பணிகளை நினைவுகூரும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 81 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பேனா நினைவுச் சின்னம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சுனாமி, புயல், நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் கருவிகளுடனும் அமைக்கப்பட இருக்கிறது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் வைக்கக்கூடாது என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

அறக்கட்டளை நிதியில்
இந்நிலையில் இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் நடிகருமான விஜய பிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அரசு அமைக்கவிருக்கும் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் குறித்து முதல் ஆளாக அறிக்கை தந்தது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். திமுக அறக்கட்டளை நிதியை வைத்து எங்கு வேண்டுமானாலும் பேனா சின்னத்தை வைக்கட்டும், மக்கள் வரிப்பணத்தில் கட்டுவது தவறான விஷயம்" எனத் தெரிவித்தார்.

தைரியமாக
மேலும் பேசிய அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே 2011 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் அதே தொகுதியில் தேமுதிக தனித்து போட்டியிடும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார். வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும் நாங்கள் தைரியமாக களத்தில் இறங்கியுள்ளோம். வெற்றிக்கான வியூகங்களை வகுத்து தேமுதிக தொண்டர்கள் களத்தில் இறங்கி வெற்றிக்கு பாடுபடுவார்கள். வேட்பாளர் ஆனந்த் இளம் வேட்பாளர், மக்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது" எனத் தெரிவித்தார்.

தேவையில்லாதது
முன்னதாக, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாதது. மக்களது வரிப் பணத்தை கொண்டு பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில் பேனா போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications