கடைசியாக வீல் சேரில் வந்த விஜயகாந்த்! நாற்காலியிலிருந்து சாய்ந்த கேப்டன்.. கண்ணீர் விட்ட தொண்டர்கள்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமான நிலையில் அவர் பொதுக் குழு கூட்டத்தில் வீல் சேரில் வந்ததை பார்த்ததுமே பல தொண்டர்களின் இதயமே வெடித்து சிதறியது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த- கேப்டன், விஜி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் பெயரை நினைத்தாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது அவரது கம்பீரமான பேச்சும், தீத்தெறிக்கும் கண்கள், புடைக்கும் நரம்புகள், சிங்க நடை, அழகான சிரிப்பு, நல்ல உடல் பாங்கு... இவைகள்தான்.

கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவர் கட்சி பணிகளில் நேரடியாக ஈடுபடாமல் இருந்து வந்தார். அவருக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவரால் சரிவர பேச முடியாமல் தவித்து வந்தார். அவருக்கு நரம்பு தளர்ச்சி பிரச்சினையும் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் இருந்ததை பார்த்த தமிழக மக்கள் ஜீரணிக்க முடியாமல் கண்ணீர் சிந்தினர். அந்த புகைப்படத்தை பார்த்து அவருடைய நண்பர்கள் ராதாரவி உள்ளிட்டோர் கண்ணீர் விட்டனர்.
இந்த நிலையில் அவர் நவம்பர் 18 ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு 14 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பினார். இதையடுத்து 14 ஆம் தேதி பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது விஜயகாந்த் வீல் சேரில் வந்தார். இதை பார்த்ததும் தொண்டர்களின் இதயம் நொறுங்கியது.
இதையடுத்து அவருடைய கைகளை கூட அவரால் விரிக்க முடியாத நிலை இருந்தது. அவரது கைகளை பிடித்து தம்ஸ் அப் காட்ட வைத்தனர். இந்த நிலையில் பிரேமலதா பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் எழுந்ததும் திடீரென விஜயகாந்த் எழ முயற்சித்து திடீரென சாய்ந்தார். இதனால் தொண்டர்கள் பதறினர். அவரது உடல்தான் அவருக்கு பிரதானம்.
கட்டுக்கோப்பான உடல், கர்ஜனை குரல் எல்லாம் போய்விட்டதே என தொண்டர்கள் கண்ணீர் விட்டனர். இந்த நிலையில் அவர் மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்கு நுரையீரல் அழற்சியும் இருந்தது. இதனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications