ஹீரோயினுக்காக காக்க வைக்கப்பட்ட விஜயகாந்த்.. யாரும் பசியுடன் இருக்கக் கூடாது.. அந்த நொடியே முடிவு
சென்னை: நடிகர் விஜயகாந்த் தனது இரண்டாவது படமான அகல் விளக்கு படத்தில் நடித்த போது, அதில் சாப்பிட காலை எழுந்த போது, ஹீரோயினுக்காக அவரை காக்கவைத்துள்ளது படக்குழு.. அப்போதே படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது முடிவு செய்த செய்த விஜயகாந்த், அதை கடைசி வரை பின்பற்றினார்.
நடிகர் விஜயகாந்தின் சொந்து ஊர் மதுரை மாகாளிப்பட்டி.. இவரது இயர்பெயர் நாராயணசாமி , சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வாய்ப்பு தேடியவர். சினிமாவின் வாய்ப்பு தேடுவதற்காகவே தனது பெயரை விஜய்ராஜ் என்று மாற்றினார். விஜயகாந் முதன் முதலில் நடித்த படம் எதுவென்றால், ரஜினிக்கு தம்பியாக 'என் கேள்விக்கு என்ன பதில்' என்கிற படத்தில் தான் நடித்தார். அதன் பின்னர் எம்.ஏ.காஜா இயக்கிய 'இனிக்கும் இளமை' படத்தில் வில்லனாக நடித்தார். அப்போது முதல் அவரது பெயர் விஜயகாந்த் ஆனது.

விஜயகாந்த் காதாநாயகனாக நடித்த இரண்டாவது படம் 'அகல் விளக்கு'. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது, அதிகாலை முதலே ஹீரோயினுக்காக விஜயகாந்த் காத்திருந்தார். அப்போது விஜயகாந்த் காலை உணவு சாப்பிட எழுந்தபோது, அவரை தடுத்த படக்குழுவினர் மதியம் வரை காத்திருக்க வைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அப்போது வைராக்கியத்தை வளர்த்துக் கொண்ட விஜயகாந்த், தன்னுடைய படப்பிடிப்பில் யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்றும், தான் சாப்பிடுவம் அதே உணவையே கடைநிலை பணியாளர்கள் வரை சாப்பிட வேண்டும் என்கிற முறையை கொண்டு வந்தார்.. இதை பின்னாளில் தான் ஊடகம் ஒன்றில் தெரிவித்தார்.
விஜயகாந்த் அதோடு நின்றுவிடவில்லை, படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுவே லைட்மேன் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற திட்டத்தையும் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
விஜயகாந்த் சாப்பாடு விஷயத்தில் மட்டுமல்ல, தன்னிடம் உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர். அவரால் உதவி பெற்ற பல உதவி இயக்குனர், சினிமா கலைஞர்கள், திரை நட்சத்திரங்கள் பின்னாளில் அதனை கூறிய பின்னர் தான் தெரியவந்தது. சினிமாவில் லைட்மேன் தொடங்கி,நடன கலைஞர்கள் வரை பலரும் அவரும் உதவி பெற்றது பின்னாளில் தான் தெரியவந்தது..

அது போல் படப்பிடிப்பு தளங்களில் லைட் மேன்களுடன் துண்டை விரித்து தூங்கிடுவாராம். கேரவனில் ஏசி அறைக்கு செல்லமாட்டாராம். இதெல்லாம் லைட்மேன்கள் சொல்லித்தான் தெரியவந்தது. பெரிய நடிகர் என்பதை எங்குமே காட்டாதவர். படப்பிடிப்பு தளத்தில் ஒரு வேளை சாப்பாடு என்பதை 3 வேளை உணவாக மாற்றினார். ஒரு முறை தொழிலாளர்கள் சாப்பாடு போதவில்லை. அப்போது ஏன் சாப்பிடவில்லையா என விஜயகாந்த் கேட்டாராம் , சாப்பாடு தீர்ந்துவிட்டதாக சொன்னார்களாம், உடனே உணவு கான்ட்ராக்டரை அறைந்து புதிய உணவு தயாரிக்க சொன்னதாக இன்று வரை சொல்கிறார்கள். விஜயகாந்த் இயல்பான வெள்ளந்தியமான மனிதராகவே வாழ்ந்தார். அவர் எந்த இடத்திலும் நடிக்கவில்லை.. சினிமாவில் நடிக்க தெரிந்த விஜயகாந்த்திற்கு அரசியலில் நடிக்கவே தெரியவில்லை.. தெரிந்திருந்தால்.. அவரை அரசியல் ஜாம்பவனாக உலகம் கொண்டாடியிருக்கும்..












Click it and Unblock the Notifications