தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த வருவோருக்கு சென்னை காவல்துறை முக்கிய அறிவிப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் சென்னை அண்ணாசாலையை ஒட்டி உள்ள தீவு திடலில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வரும் வாகனங்கள் தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அஞ்சலி செலுத்தப்ப்பட்டது. அதன்பின்னர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

அங்கு கட்டுங்கடங்காத கூட்டம் வந்த காரணத்தால் கோயம்பேடு பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதையடுத்து விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அண்ணா சாலையில் உள்ள தீவு திடல் எடுத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. இன்று அதிகாலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்த் உடல் தீவு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் அமர்ந்து இருப்பதற்கு வசதியாக ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஞ்சலி செலுத்த வருவோருக்காக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,
அனைத்து விஐபி மற்றும் விபிஐபிக்களின் வாகனங்கள், காமராஜர் சாலை, நேப்பியர் பால்ம், போர் நினைவு சின்னம், கொடி பணியாளர் சாலை வழியாக அண்ணா சாலைக்கு தீவுத்திடலின் இடது நுழைவு வழியாக செல்லலாம்.
மற்ற மூத்த திரைக்கலைஞர்களின் வாகனங்கள் பல்லவன் சந்திப்பு வாலாஜா ரோடு வழியாக கொடி பணியாளர் சாலையை அடைந்து தீவுத்திடலை அடையலாம்.
தீவு திடல் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் வேறு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் அதிக அளவில் உள்ளதால், அவர்களின் வாகனங்கள் அண்ணா சிலை வழியாக அனுமதிக்கப்பட்டு, கடற்கரை வாகன நிறுத்தமிடத்தில் வானங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து இருசக்கர வாகனங்கள், தொண்டர்களின் வாகனங்கள், பெரியார் சிலை, சுவாமி விவேகானந்தா சாலை, எம்எல்ஏ ஹாஸ்டல் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
வணிக வாகனங்கள், வழக்கமான வாகனங்கள் தீவுத்திடலை சுற்றி அனுமதிக்கப்படாது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications