அப்பவே அப்படி.. வீட்டில் இருந்து டின்களில் முறுக்கு, மிக்சர்.. விஜயகாந்த் என்ன செய்வாராம் தெரியுமா?
சென்னை: விஜயகாந்த், சினிமாவில் ஜெயித்த பிறகு தான் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராக மாறினாரா என்றால் இல்லை. அவர் பள்ளி காலத்திலேயே ஈகைப் பண்போடுதான் திகழ்ந்துள்ளார். அதற்கு அவரது ஹாஸ்டல் வாழ்க்கை நிகழ்வே ஓர் உதாரணம்.
நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 29ஆம் தேதி மாலை, முழு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த்தின் மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

விஜயகாந்தின் ஈகைக் குணம்: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய பலருமே, அவரது ஈகை குணம் பற்றித்தான் வியந்து வியந்து பேசினர். சினிமாவில் பெரும் முயற்சிக்குப் பிறகு நுழைந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், உதவி இயக்குனர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கி வந்தார்.
அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்தின் நோக்கம். அதன்படி அனைவருக்கும் நல்ல சுவையான சாப்பாடு கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த செயல் சினிமா நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவராலும் போற்றப்பட்டது. தன்னிடம் உதவி எனக் கேட்டு வந்த அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் விஜயகாந்தினுடையவை.
பள்ளி காலத்திலேயே அந்த பழக்கம்: விஜயகாந்த், சினிமா துறைக்கு வந்த பிறகுதான் இப்படி ஈகைப் பண்போடு நடந்து கொண்டாரா என்றால் அதுதான் இல்லை. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, நண்பர்களோடு பகிர்ந்து உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர் விஜயகாந்த். இதுபற்றி அவருடன் படித்த நண்பர்களே தே பிரித்தோ பள்ளி முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியின்போது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

விஜயகாந்த் மதுரையில், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் என பல பள்ளிகளில் படித்துள்ளார். தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது, அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்தார் விஜயகாந்த். ஹாஸ்டலில் இருக்கும்போது, அவரது வீட்டில் இருந்து தகர டின்களில் முறுக்கு, மிக்சர் போன்றவற்றை கொடுத்து அனுப்புவார்களாம்.
முறுக்கு, மிக்சர் டின்கள்: மதுரையில் விஜயகாந்த்தின் அப்பா ரைஸ் மில் வைத்திருந்தார் என்பதால் அங்கு அரைக்கும் மாவில் அடிக்கடி முறுக்கு போன்ற பலகாரங்களை செய்வார்களாம். அவை தான் விஜயகாந்த், அவரது சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் விருப்பமான ஸ்நாக்ஸ்.
அந்தவகையில், அவர் தேவகோட்டையில் ஹாஸ்டலில் தங்கி படித்தபோது வீட்டில் இருந்து தகர டின்களில் முறுக்கு, மிக்சர் ஆகியவற்றை கொடுத்து அனுப்புவார்களாம். அப்படி கொடுக்கும்போது, தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வைத்து சாப்பிடு, எல்லோருக்கும் கொடுத்து தீர்த்துவிடாமல் தனியாக நீ மட்டும் சாப்பிடு எனச் சொல்லி அனுப்பி விடுவார்களாம்.
ஒரே நாள் தான்: ஆனால், விஜயகாந்த், ஊரில் இருந்து தின்பண்ட பெட்டி வந்து இறங்கியதுமே நண்பர்களை அழைத்து எல்லோருக்கும் கொடுத்துச் சாப்பிட்டு ஒரே நாளில் மொத்த டின்களையும் காலி செய்துவிடுவார்களாம். உணவு விஷயத்தில் தன் வயிறு நிறைந்தால் மட்டும் போதாது, அனைவரும் சாப்பிட வேண்டும் என்ற பண்பு விஜயகாந்துக்கு அவரது சிறு வயதிலேயே இருந்துள்ளது.
-
TN Election 2026: தமிழகத்திலேயே Luckiest கட்சி தேமுதிகதான்! -
தேமுதிக அதிர்ச்சி வைத்தியம்! பார்த்தசாரதிக்கு 'சீட்' மறுப்பு! கட்சி தாவுகிறாரா மாஜி எம்எல்ஏ? -
திருமா பெயரை சொன்ன போது.. அப்படியே அமர்ந்திருந்த பிரேமலதா? உண்மையில் என்ன கோபம்? கசிந்த தகவல் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம்












Click it and Unblock the Notifications