சிறுநீர் கழித்த சுப்பையா கைது.. புகாரளித்தவருக்கு அடுத்தடுத்து மிரட்டல்.. பாதுகாப்பு கோரும் பாலாஜி.!
சென்னை : பெண் வீட்டு முன் பாஜக மாணவர் அமைப்பான ABVP-யின் முன்னாள் நிர்வாகியான டாக்டர்.சுப்பையா சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக அவர், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ள நிலையில், இதுதொடர்பாக புகார் அளித்தவரை சிலர் மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு அவர் வழங்கக்கோரி போலீசாரிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மூதாட்டி வீட்டு வாசலில் மருத்துவர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முன்னாள் நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது ஆதம்பாக்கம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பார்க்கிங் பிரச்சினை
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பார்கிங் தொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் வசிக்கும் மருத்துவர் சுப்பையாவுக்கும் மூதாட்டிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் வழக்குப்பதிவு செய்த போதிலும் டாக்டர் சுப்பையா மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமலே இருந்தது.

சுப்பையா கைது
இந்நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவர் சுப்பையாவை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி சிறையில் இருந்த ஏபிவிபி நிர்வாகிகளைச் சந்தித்த விவகாரத்தில் சமீபத்தில் தான் இந்த டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த விவகாரத்தில் டாக்டர் சுப்பையா பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகாரளித்தவருக்கு மிரட்டல்
இந்த நிலையில் தொடர்பாக புகார் அளித்த பாலாஜி விஜயராகவனை சிலர் மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு அவர் வழங்கக்கோரி போலீசாரிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் சுப்பையா வழக்கில் புகார் அளித்த பாலாஜி விஜயராகவன், அந்த புகாரை வாபஸ் பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் மருத்துவர் சுப்பையா மீதான புகாரை வாபஸ் பெறவில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவரை பாஜக, ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிலர் மிரட்டல் விடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

போலீசில் புகார்
மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் மிரட்டல்கள் வருவதாகவும், புகாரை வாபஸ் பெறகோரி வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சென்னைஒ தெற்கு போலீஸ் இணை கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக ஆதரவளித்த அனைவருக்கு மனமார்ந்த நன்றி எனவும், அதே நேரத்தில் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென பாலாஜி விஜயராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications