கை பட கூடாதா? தமிழிசையிடம் பொன்னாடையை கையில் தராத விஜயேந்திரர்.. ஏன் இப்படி? பெரும் சர்ச்சை
சென்னை: தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் ஆளுநர் தமிழிசைக்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
அங்கு ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. அதோடு தமிழிசையை அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் கேசிஆர் புறக்கணித்தார்.

தமிழிசை சர்ச்சை
பின்னர் நடந்த பல்வேறு கூட்டங்களில் தமிழிசை புறக்கணிக்கப்பட்டார். முழுகு மாவட்டத்தில் நடந்த சமக்கா சரலக்கா விழாவில் தமிழிசை கலந்து கொள்ள சென்றார். அங்கு அவரை வரவேற்க யாருமே செல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோக புதுச்சேரியிலும் துணை நிலை ஆளுநரான தமிழிசை ஓரம்கட்டப்படப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமும் தமிழிசை புகார் அளித்தார்.

ஆளுநர் தமிழிசை விஜயேந்திரர்
இந்த நிலையில்தான் தற்போது தமிழிசை இன்னொரு விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சங்கராச்சாரியார் விஜயேந்திரரிடம் ஆசிர்வாதம் வாங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானாவில் கந்தகிரியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு கும்பாபிஷேகம் நிகழ்வில் கலந்து கொள்ள தமிழிசை சென்றார்.

காஞ்சி மடம்
இந்த நிகழ்வில் காஞ்சி மடத்தின் சங்கராசாரியாரான விஜயேந்திரர் கலந்து கொண்டார். இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு விஜயேந்திர சரஸ்வதி பொன்னாடையை வழங்கினார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. அதில் தமிழிசை கை மீது படாமல் சில மீட்டர்கள் கையை உயர்த்தி தமிழிசை கையில் பொன்னாடையை போட்டுள்ளார். தமிழிசை கையில் படாத வண்ணம் மேலிருந்து அவர் பொன்னாடையை வீசியது வீடியோவாக பதிவாகி உள்ளது.

சர்ச்சை மேல் சர்ச்சை
இதே நிகழ்வில் மற்ற சாமியார்களுக்கு இவர் கைகளில் தொடும்படி பொன்னாடை வழங்கி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையாகி உள்ளது. இது மிகப்பெரிய தீண்டாமை குற்றம். இது தவறு என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். தமிழிசை மிக முக்கியமான அரசியல் தலைவர்., ஆளுநர், துணை ஆளுநராக பதவி வகித்து வருகிறார். அப்படிப்பட்ட ஒருவரிடம் சங்கராசாரியார் ஒருவர் இப்படி நடந்து கொண்டது தவறு என்று நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications