விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், விஜய் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்த அவர், பரப்புரையையும் மேற்கொண்டிருந்தார். ஆனால், விஜய்யின் பேச்சை கேட்க வந்த கூட்டத்தை விட, அவரை பார்க்க வந்த கூட்டமே அதிகமாக இருந்திருக்கிறது.
விஜய் பேசிக்கொண்டிருக்கையில், அதை காதில் வாங்காமல், அவரை பின்னாடி வைத்து செல்ஃபி எடுப்பதில்தான் பலரும் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.

சென்னையில் என்ன நடந்தது?
சென்னை பெரம்பூரில் போட்டியிட, நேற்று விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். பின்னர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவரது வாகனம் செல்லும் இடம் எல்லாம் மக்கள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக, ரசிகர்கள் அதிக அளவில் அவரை பின் தொடர்ந்தனர். அரசியல் தலைவர்கள் பரப்புரையில் பங்கேற்க கட்டுபாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் கூட்டத்தை கூட்டக் கூடாது. பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
விதிமுறைகள் மீறல்
ஆனால், இப்படியான எந்த விதிமுறைகளையும் விஜய் மதிக்கவில்லை. நடைபாதையை, முழு சாலையை ஆக்கிரமித்து, ஆம்புலன்ஸ் கூட போகவிடாமல் விஜய்யின் ரசிகர்கள் மறித்திருக்கிறார்கள். இதனால் அவசர தேவைக்காக செல்பவர்கள் கூட போக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து விஜய் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
செல்ஃபி எடுக்க வந்த மக்கள்
இதெல்லாம் ஒருபுறம் எனில், மறுபுறம் அரசியல் தலைவராக விஜய் மக்களிடம் எதிரொலிக்கவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பேசும்போது அந்த தலைவர்களின் பேச்சை கேட்பதற்குதான் மக்கள் அலைமோதுவார்கள். ஆனால், விஜய் கூட்டத்திற்கு வந்திருந்த ரசிகர்கள், செல்ஃபி எடுப்பதில்தான் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.
அரசியல் தலைவர்?
விஜய் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கிறார். மறுபுறம், ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டும், அவர் என்ன பேசினால் நமக்கென்ன என்கிற தொணியிலும் கூச்சலிட்டுக்கொண்டிருந்திருக்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில பரவலான ஷேராகியிருக்கிறது. இந்த வீடியோக்கள்தான் விஜய் வெற்றிகரமான அரசியல் தலைவராக இன்னும் உருவாகவில்லை என்கிற விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications