அதிமுகவை காலி செய்வதுதான் விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ள அஜெண்டா.. பகீர் கிளப்பும் திருச்சி சூர்யா!
சென்னை: "எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அதிமுகவின் சிதறிப் போயுள்ள வாக்குகளையும் பெற வேண்டும் என்பதுதான் விஜய்க்கு இப்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ள அஜெண்டா. அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்தால் அதிமுக ஓட்டுகளை பெற முடியாது என்பதால் அதிமுகவை தாக்காமல் திமுவை மட்டும் அட்டாக் செய்து இருக்கிறார்." என ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார் திருச்சி சூர்யா.
தவெகவின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் தவெகவின் கொள்கைகள், மற்றும் அரசியல் எதிரிகள், செயல்திட்டங்கள் உள்ளிட்டவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்தார். மேலும், "2026 சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறுவோம். நம் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களித்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும்" என்று விஜய் தெரிவித்தார்.

விஜய் அரசியல்: அண்மைக் காலமாக, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள், அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றன. இந்தச் சூழலில், முதல் மாநாட்டிலேயே அதிகாரத்தில் பங்கு அளிப்பதாக அறிவித்து இருக்கிறார் விஜய். இது அரசியல் கட்சிகள் இடையே விவாதங்களை கிளப்பி விட்டுள்ளது. இந்நிலையில், விஜய்யின் அரசியல் தொடர்பாக நமது ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனும், முன்னாள் பாஜக மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா.
விஜய் பல கட்சிகளுடன் பேசினார்: திருச்சி சூர்யா பேசுகையில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தற்போது திமுக கூட்டணியில் நடந்து வரும் பிரச்சனை. அதை நான் தருகிறேன் என விஜய் சிக்னல் கொடுத்துள்ளார். கடந்த ஒரு மாதமாகவே திருமாவளவன், கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சியிடம் விஜய் தரப்பில் பேசி வருகிறார்கள். சீமானிடமும் பேசினர். ஆனால், சீமான் அதற்கு ஒத்துவரவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பல ஆண்டுகளாக எம்.பிக்கள் இத்தனை பேர் இருப்பதற்கு காரணமே திமுக தான். இன்றைக்கு தமிழ்நாட்டில் 10% வாக்கு வங்கி இருப்பதாக காங்கிரஸ் பீற்றிக் கொள்வதற்கும் காரணம் திமுக கூட்டணி தான். தனியாக நின்று இத்தனை இடங்களை ஜெயிக்க முடியுமா? காங்கிரஸில் இப்போது வேட்பாளராக நிற்கவே ஆள் இல்லை.
மோடி சந்தித்த 2 நடிகர்கள்: பிரதமர் ஆனபிறகு மோடி தமிழ்நாட்டில் சந்தித்த நடிகர்கள் இரண்டே பேர் தான். ரஜினிகாந்த், விஜய். ரஜினியை வைத்து அரசியலை கையில் எடுக்க முயன்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் பிடிகொடுக்காமல் விலகிவிட்டார். அதன்பிறகு விஜய்யை பிடித்து களத்தில் இறக்கி உள்ளனர். முதல் மாநாடு நடத்துவதற்கு முன்பே கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளதும் அதன் பின்னணியில் தான்.
பாஜகவை சித்தாந்த எதிரி என திட்டமிட்டே காட்டிக் கொள்கிறார் விஜய். இல்லையென்றால் பாஜகவின் பி டீம் என்ற சாயம் வெளுத்துவிடும் என்பதற்காக ப்ளே செய்கிறார் விஜய். நான் இருப்பது தெரியாமல் விளையாடு என்றுதான் மேலே இருந்து காசு கொடுக்கிறார்கள். பாஜகவின் கண்ணசைவுக்குத்தான் விஜய் செயல்படுவார்.
அடிபடும் வாக்குகள்: மாநாட்டுக்கு கூட்டம் வந்ததால், உடனே அடுத்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்பது நடக்காது. இப்போது தான் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு முதல் முறையாக வெளியில் வந்து பேசி இருக்கிறார். விஜய்க்கு இது ஒரு லைவ் ஸ்டேஜ் ஷோ. விஜய் கட்சியால் சீமான் வாக்குகளும், அதிமுக வாக்குகளும் தான் அடிபடும்.
விஜய்க்கு, மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது, அதனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என அழைக்கிறார். ஆனால், ஏற்கனவே ராஜா போல ஆட்சியில் இருக்கும் கட்சி எதற்கு தர என்ன அவசியம்? திமுகவிடம் இருந்து மிரட்டி அதிகாரத்தில் பங்கு பெற முடியாது. குமாரசாமி போல, தனித்து நின்று 30 சீட்டுகளை ஜெயித்துக் காட்டி, ஆட்சி அதிகாரத்திற்கு தங்கள் தயவு தேவை என்ற நிலையை ஏற்படுத்த முடியுமா? அப்படி இருக்கும்போது சி.எம் சீட் கேட்க அதென்ன பிஸ்கட்டா?
விஜய்யின் இப்போதைய அஜெண்டா: உரிமைகளுக்காக கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்து, அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அழுத்தம் கொடுக்கலாம். ஆனால், துணை முதல்வர் பதவி கிடைக்கவில்லை என கூட்டணியை விட்டு விலகினால் அது பதவி ஆசை தான்.
எடப்பாடி பழனிசாமியின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அதிமுகவின் சிதறிப் போயுள்ள வாக்குகளையும் பெற வேண்டும் என்பதுதான் விஜய்க்கு இப்போதைக்கு கொடுக்கப்பட்டுள்ள அஜெண்டா. அதற்காகத்தான் திமுகவை விமர்சித்த விஜய், அதிமுகவை பற்றி ஒன்றும் பேசவில்லை. அதிமுகவை ஊழல் கட்சி என்றால் அதிமுக ஓட்டுகளை பெற முடியாது என்பதால் அதிமுகவை தாக்காமல் இருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார் திருச்சி சூர்யா.
-
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக!












Click it and Unblock the Notifications