ஜனநாயகனில் திமுகவின் சீக்ரெட்டை விஜய் உடைக்க போகிறாராமே? பாஜகவுக்கு பிடித்த அந்த சீன்! பாலு அதிரடி
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தில் குடும்ப அரசியல் குறித்து நடிகர் விஜய் ஸ்ட்ராங்கான மெசேஜ் சொல்லியுள்ளதால் இதை பாஜக தங்களது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி, திமுகவுக்கு செக் வைக்கும் என மூத்த பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் அமைப்பை விஜய் தொடங்கியுள்ளார். அவரது இலக்கு 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பது என்பதுதான். இதற்காக இப்போதே பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் விஜய் மேற்கொண்டுள்ளார்.
மேலும் தேர்தலுக்கு வியூகம் வகுக்கவும் குழு அமைத்தாகிவிட்டது. அதிமுக- பாஜக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர் என மும்முனை போட்டி இருந்த நிலையில் தற்போது தவெகவுடன் சேர்த்து 4 முனை போட்டி நிலவும்.
திமுக
திமுகவோ எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடும். அதிமுகவோ ஆட்சியை பிடிக்க முட்டி மோதும். பாஜகவோ இரட்டை இலக்கத்தில் வென்று சட்டசபைக்கு செல்ல முயற்சிக்கிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சியோ யாருடனும் கூட்டணி அமைக்காமல் ஆட்சியை பிடிக்க எண்ணுகிறது.
நாம் தமிழர்
தற்போது நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துவிட்டது. எனவே இந்த தேர்தலில் கூடுதல் வாக்குகளை பெற நாதக முனைப்பு காட்டும் என தெரிகிறது. இத்தனை பேருக்கு மத்தியில் தவெகவும் போட்டியிடுகிறது.
ஓவர் நைட்
ஓவர் நைட்டில் ஒபாமா போல் ஒரே தேர்தலில் முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார். இவரது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு முழு நேர அரசியலுக்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.
ஜனநாயகன் படம்
அந்த வகையில் ஜனநாயகன் படம் முடிந்துவிட்டது. இந்த படம் வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. ஜனநாயகன் என்ற பெயரிலேயே இது அரசியலை சொல்லும் படமாக தெரிகிறது. மேலும் விஜய்யின் கடைசி படம் என்பதாலும், படம் வெளியான 3 மாதங்களில் தேர்தல் என்பதாலும் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவுக்கு செக்
இந்த படம் திமுகவுக்கு செக் வைக்கும் என்றும் இது தவெக மட்டுமல்லாமல் பாஜக பிரச்சாரத்திற்கு உதவும் என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து செய்யாறு பாலு கூறியிருப்பதாவது: ஜனநாயகன் படம் நிச்சயம் அரசியல் படம். இதில் தனது மகனுக்கு ஒரு புது அரசியலை தாய் சொல்லிக் கொடுக்கிறார்.
குடும்ப அரசியல்
அந்த தாய், குடும்ப அரசியலையோ தற்போதைய அரசியல் கட்சியையோ விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் விஜய்க்கு அம்மாவாக நடிக்க பலர் தயக்கம் காட்டினர். ஆனால் ரேவதி தான் நடிப்பதாக முன் வந்து நடித்துள்ளார்.
ஏன் இந்த இழுத்தடிப்பு
இந்த படத்தின் post production பணிகள் எல்லாம் முடிய 3 முதல் 4 மாதங்களே போதும். ஆனால் வேண்டுமென்றே அடுத்த ஜனவரி மாதம் வரை இந்த படத்தை இழுத்தடிக்கிறார்கள். இதற்கு காரணமாக 4 விஷயங்கள் சொல்லப்படுகின்றன.
காரணங்கள் 4
- ஜனநாயகனில் அரசியல் சொல்லப்பட்டுள்ளதால் இந்த படத்தை வெளியிட விடாமல் திமுக தடுக்கும். இதை தங்களுக்கு அனுதாபமாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளாராம்.
- விஜய்யின் கடைசி படம் என்பதால் ஏற்கெனவே எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ஆளும் கட்சி தடை விதித்தால் அது சட்டசபை தேர்தலில் விஜய்க்கு பிளஸ்ஸாக மாற வாய்ப்புள்ளது.
- ஜனநாயகன் படத்தில் ஆழமான ஒரு அரசியல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது குடும்ப அரசியல் குறித்து ஒரு விஷயம் பேசப்பட்டுள்ளது. இந்த படம் வெளி வந்தால் அந்த குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தை போஸ்டர் அடித்து திமுகவுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்யும்.
- அதாவது எய்ம்ஸ் செங்கலை வைத்து உதயநிதி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்தது போல் ஜனநாயகன் படத்தில் வரும் காட்சியை வைத்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்யும். எனவே அடுத்த ஆண்டு ஜனநாயகனை வைத்து புதிய அரசியல் செய்ய விஜய் முடிவு செய்துவிட்டார்.
இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications