அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..அல்வா கொடுத்த அதிமுக! விஜயின் அடுத்த ப்ளான் என்ன? பரபர பாலிடிக்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கலாம் என விஜய் கணக்கு போட்டு இருந்த நிலையில் பாஜக பக்கம் சாய்ந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதை அடுத்து தனது தலைமையில் புதிய கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டு வருகிறாராம். குறிப்பாக தேமுதிக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க விஜய் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

நேற்று முன் தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண விழா கோவையில் நடைபெற்றது. இதில் பாஜக தரப்பிலிருந்து அண்ணாமலை, தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Vijay tvk aiadmk

முன்னதாக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், நத்தம் விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன், ஆனந்தன் உள்ளிட்டோர் ஏற்கனவே அங்கு காத்திருந்தனர். அப்போது வந்த அண்ணாமலை உள்ளிட்டோரை அதிமுக முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் எழுந்து நின்று வரவேற்றனர்.

ஒவ்வொருவரின் கையைப் பிடித்து அவர்களுடன் நெருக்கமாக அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தார். அவர்களும் உற்சாகம் பொங்க அண்ணாமலையுடன் பேசிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து மணமக்களை அண்ணாமலை வாழ்த்தி சென்றார். பிற நிர்வாகிகளும் அண்ணாமலையுடன் நன்கு பேசியதை பார்க்க முடிந்தது. இதற்கிடையே பாஜக கூட்டணிக்கான அச்சாரம் தான் எஸ்பி வேலுமணி இல்ல திருமணம் என்றனர் பாஜக நிர்வாகிகள்.

அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் எஸ்பி வேலுமணி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அன்று மாலையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி திமுக தான் தங்களுக்கு எதிரி வேறு யாரும் தங்களுக்கு அரசியல் எதிரி அல்ல. தேர்தலுக்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார். இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி உறுதி என்கின்றனர் அதிமுகவினர்.

மேலும் தேமுதிக பாமக ஆகிய கட்சிகள் ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பலாம் என நம்பிக்கையில் இருக்கின்றனர் பாஜகவினர். இது ஒரு புறம் இருக்க அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கணக்கு போட்டு இருந்த விஜய் அதிருப்தியில் இருக்கிறார். ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் விஜய் தனித்து போட்டியிட வேண்டும் என அறிவுறுத்தி வந்த நிலையில் திடீரென அதிமுக, பாஜக பக்கம் சாய்ந்திருப்பது அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

தனித்துப் போட்டி என்பது குறிப்பிட்ட வாக்கு சதவீதம் தங்களிடம் இருக்கிறது என காட்டிக் கொள்வதற்காக மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் விஜய் ஆந்திர மாடலில் முதலமைச்சர் பதவியை பிரதான கட்சிக்கு கொடுத்து விட்டு துணை முதலமைச்சர் பதவியை தான் பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் அதிமுக திடீரென பாஜக பக்கம் சாய்ந்து இருப்பது விஜய் தரப்பை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. இதை எடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விஜய் தரப்பு ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் 2016 சட்டமன்ற தேர்தலை போல மூன்றாவதாக ஒரு கூட்டணியை அமைக்கலாம் என விஜய் தரப்பு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா சீட் தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் தேமுதிக, அனைத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்த பாமக, இதுவரை யாருடனும் கூட்டணி வைக்காத நாம் தமிழர் ஆகிய கட்சிகளை சேர்த்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்தோடு புதிய கூட்டணி அமைக்கலாம் என விஜய் திட்டமிட்டு வருகிறாராம். இதற்காக கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அனுப்பவும் விஜய் தரப்பு தயாராகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+