திமுக 250 கோடி; அதிமுக 200 கோடி! கோடிகளை வீழ்த்தி கொடி நாட்டுவாரா விஜய்?
சென்னை: புதியதாக விஜய் தொடங்கி உள்ள அரசியல் கட்சி, யாருடைய வாக்குகளைப் பிரிக்கும் என்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
விஜய் புதியதாகக் கட்சி தொடங்கி இருப்பது பற்றிய கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "அரசியல் கட்சியை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் தொடர்ந்து களத்தில் நிற்க வேண்டும்" என்கிறார்.

உண்மைதான். ஒரு கட்சி ஆரம்பிக்க யாரும் தேவையில்லை. ஏன் பெரிய தொண்டர் படைகள் கூடத் தேவையில்லை. ஒரே ஒரு ஆள் மட்டும் ஒரு கட்சியைத் தொடங்கிவிட முடியும். அதற்கு உதாரணம் பழ.கருப்பையா. கூடவே தமிழருவி மணியன்.
இவர்களைப் போல் அல்ல விஜய். தமிழ் சினிமாவில் இப்போதும் மார்க்கெட் உள்ள நடிகர். பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்து, அவர் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று காத்திருப்பவர்கள் ஆயிரம் பேரைக் காட்ட முடியும்.
அந்தளவுக்கு ஒரு சர்வதேச மார்க்கெட் அவருக்கு உள்ளது. அவர் திரைத்துறையில் தொடர வேண்டும் என நினைத்தால் குறைந்தது இன்னும் 20 ஆண்டுகள் தொடர முடியும். அதற்கான இடைவெளி தமிழ் சினிமாவில் உள்ளது.
அவரை இமிட்டேட் செய்து நடிக்கப் பலர் இப்போது திரைத்துறையில் உள்ளே போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பு கமர்ஷியல் வேல்யூ உள்ள ஒன்றாக இருந்தது. அவருக்குக் குழந்தை ஆடியன்ஸ் என்று யாரும் இல்லை. ஆனால், விஜய்க்கு ஒவ்வொரு குட்டி பாப்பாவும் குட்டி டான்ஸ் ஆடும் அளவுக்கு அவர் தனது செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்.

எப்படி அவரை விமர்சித்தாலும் அவர்தான் இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அந்த அளவுக்கு ஹாட்கோர் ஆடியன்ஸை தன் சட்டைப் பைக்குள் வைத்திருப்பவர் விஜய்.
இந்த சினிமா செல்வாக்கை மட்டும் நம்பி அவரால் இன்றைய அரசியல் களத்தில் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது. ஏனென்றால், இங்குள்ள அதிமுக அல்லது திமுக ஆகிய கழகங்கள் பழம் தின்று கொட்டைப் போட்ட கட்சிகளாக உள்ளன.
தி.மு.கவின் சொத்து மதிப்பு 2017-2018 ஆண்டுக்கான கணக்குவழக்கின் ரூ.191.64 கோடியாக இருந்தது. இது தேர்தல் ஆணையத்தால் 2019 அதிகாரப்பூர்வமான கணக்கு. இன்றைக்கு இதன் மதிப்பு சுமார் 250 கோடியாக இருக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை திமுகவினரை டாக்கெட் செய்து திமுகவினரின் 12 பேரின் சொத்து மதிப்பு மட்டும் சுமார்.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி என்று கூறியிருக்கிறார். இந்தத் தொகை அப்படியே உண்மையானது என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஆனால், அண்ணாமலை வெளியிட்ட சொத்து மதிப்பு குறித்து திமுகவினர் எதிர்வினையாற்றிய போது 'அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவைகள் பெரும்பாலும் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட விவரங்கள்தான். அதில் புதியதாக ஒன்றும் இல்லை' என மறுத்திருந்தனர்.
இப்போது சேலத்தில், நடந்து முடிந்த இளைஞரணி மாநாட்டுக்கு மட்டும் ரூ.59 கோடி நிதி வசூலாகி உள்ளதாக அமைச்சர் உதயநிதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த மாநாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் அமரக்கூடிய பந்தல் அமைக்கப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
இதன் மூலம் சொல்லவருவது என்னவென்றால், அந்தளவுக்குத் தொண்டர் பலம் மற்றும் பண பலம் உள்ள கட்சியாக திமுக தமிழ்நாட்டில் உள்ளது.
அடுத்து அதிமுகவுக்கு வருவோம்.

இதே நிதியாண்டு நிலவரப்படி அதிமுகவின் சொத்து மதிப்பு ரூ.189. இப்போது 4 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதன் மதிப்பில் சுமார் இது 200 கோடி நெருங்கி இருக்கலாம்.
ஆறு மாதங்கள் முன்னதாக மதுரையில் நடத்தப்பட்ட அதிமுக மாநாட்டுக்கு 100 கோடி செலவு செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. 10 லட்சம் தொண்டர் கள் வந்ததாகக் கணக்கு சொல்லப்பட்டது.
இதனடிப்படையில் பார்த்தால், அதிமுக மற்றும் திமுகவைத் தமிழ்நாட்டில் எதிர்த்து அரசியல் செய்வது சாதாரண விசயம் இல்லை. பண பலம், அரசியல் பலம், அதிகார பலம், கூடவே தொண்டர் பலம் எல்லாம் தேவை.
இதன் நடுவே தேசிய கட்சிகள் வழியே பகிரப்படும் 'வைட்டமின்' உள்ளது. ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் பணம் கங்கை வெள்ளம் போல் கரைபுரண்டு பாய்கிறது.
சாதாரணமாக ஒரு கவுன்சிலர் வீட்டில் 50 கோடி புழங்குகிறது. அப்படி என்றால், ஒரு சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு தொகுதிக்கு எவ்வளவு பணம் புழங்கும். எவ்வளவு செலவு ஆகும் என்று எல்லாம் விஜய் அறியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.
இதை எல்லாம் உணர்ந்துதான், அவர் சினிமா வாழ்க்கைக்கு குட் பை சொல்லி இருக்கிறார். ஆக, அவர் மனதில் ஏதோ ஒரு உண்மையான அரசியல் வேட்கை இருப்பதாகவே எடுத்துக் கொள்வதுதான் இப்போதைய நிலையில் சரியானதாக இருக்கக்கூடும்.

இவ்வளவு பலம் பொருந்திய இரண்டு கட்சிகளைக் கடந்து தனியாக ஒரு ஓட்டு வங்கியை விஜய் வைத்திருக்கிறரா என்றால், வைத்திருக்கிறார். ஆனால், அதில் ஒரு பகுதியினர் இதுவரை திமுக அல்லது அதிமுகவில் இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இப்போது புதிய அரசியல் பாதையை விஜய் தொடங்கி உள்ளதால், அவர் மற்ற கட்சிகளில் உள்ள தனது ஆதரவு சக்திகளை மீட்க வேண்டும். அல்லது திரும்ப அழைக்க வேண்டும். இது நடந்தால் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளிலும் இதுவரை இருந்து வந்த விஜய் ரசிகர் மன்றத்தினர், நேரடியாக விஜய் கட்சிக்கு வாக்களிப்பார்கள். அதனால் இந்த இரு கட்சிகளின் வாக்குகள் பிரிவது இயற்கையாக நடைபெறும்.
இன்னும் சொல்லப் போனால் விஜயகாந்த் கட்சியிலிருந்து கூட ஓட்டை அவர் பிரிக்கலாம்.
இவைத் தவிர புதியதாக உருவாகி வரும் இளம் தலைமுறை வாக்குகள்தான் விஜய்யின் டார்கெட் ஆக உள்ளது. அதை அவர் கடந்த ஜூன் மாத மாணவர்கள் மத்தியில் பேசும்போதே தெளிவுபடுத்தி இருந்தார்.
'நீங்கதான் நாளைய எதிர்காலம்' என அவர் சொன்னதற்குள் ஒளிந்துள்ள குறிப்புச் செய்தி இதுதான்.
விஜய் தனது கட்சியில் திராவிடம் என்ற அடையாளத்தைச் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்து உள்ளார். அது முக்கியமான செய்தி. தான் இந்தத் திராவிடக் கட்சிகளின் தொடர்ச்சி இல்லை என்று அவர் நேரடியாகச் சொல்லி இருக்கிறார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications