பவர் ஷேரிங் ஆஃபர் தந்த விஜய்: 41 சீட் + 2 ராஜ்யசபா.. முடிவை மாற்றுகிறாரா ராகுல் காந்தி? இன்று ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்டது.. ஆனால்,ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டு விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இன்னும் ஒரு முடிவும் எட்டப்படவில்லை.. ஏற்கனவே இதுதொடர்பான பேச்சுகள் நடந்த நிலையில், இன்றைய தினம் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களை போலன்றி, இந்த முறை காங்கிரஸ் கட்சி மிகவும் ஆக்ரோஷமான மற்றும் எதிர்பாராத கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக, திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதையை தேர்ந்தெடுப்பதா என்ற இக்கட்டான நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளதை தற்போதைய சூழல் காட்டுகிறது.

திமுக காங்கிரஸ்
முன்பெல்லாம் இப்படியொரு நிலை இல்லை.. கூட்டணியில் சேரும் முதல் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது.. ஆனால் இப்போது சில முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் திமுகவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
பொதுவாக திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களையே ஒதுக்க முன்வரும். ஆனால், இந்த முறை காங்கிரஸ் கட்சி 41 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு ராஜ்யசபா இடங்களை அடுக்கடுக்காகக் கேட்டுள்ளது.
தவெக விஜய் ஆஃபர்
இவை அனைத்தையும் விட முக்கியமான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் பல தசாப்தங்களாக இல்லாத ஒரு கோரிக்கையான 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்பதையும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலையில் இருக்கும் திமுகவிற்கு, காங்கிரஸின் இந்த "பவர் ஷேரிங்" கோரிக்கை பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த இழுபறி காரணமாகவே, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடங்க திமுக தயக்கம் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சி தனது பேச்சுவார்த்தைக் குழுவை ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்தாலும், திமுக தரப்பில் இன்னும் எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.
பேச்சுவார்த்தையைத் தாமதப்படுத்துவதன் மூலம் காங்கிரஸைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதும், அவர்களின் கோரிக்கைகளைக் குறைக்க வைக்கலாம் என்பதும் திமுகவின் ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தாமதம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக காங்கிரஸ் தவெக
மற்றொரு புறம், தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸிற்கு ஒரு பெரிய "ஆஃபர்? வழங்கியுள்ளதாக கூறப்படும் தகவல்கள் நிலைமையை இன்னும் சிக்கலாக்கியுள்ளன.
அதாவது தவெக தரப்பிலிருந்து காங்கிரஸிற்கு 70 தொகுதிகள் வரை தர ரெடியாக இருக்கிறதாம்.. இதுபோக, ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் காங்கிரஸில் உள்ள சில இளம் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுகவை விட்டு வெளியேறி விஜய்யுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். திமுகவை சீண்டும் வகையில் அவர்கள் பேசி வருவது கூட்டணிக்குள் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி ஆலோசனை
இப்படியான இக்கட்டான அரசியல் சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் இன்று ஒரு முக்கிய கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் உள்ள கள நிலவரம், திமுகவுடனான உறவில் உள்ள சிக்கல்கள், மற்றும் தவெக போன்ற மாற்று சக்திகளுடன் கூட்டணி வைத்தால் ஏற்படும் லாப நஷ்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனித்தனியாகக் கருத்து கேட்ட மேலிடம், இன்றைய கூட்டத்திற்குப் பிறகு ஒரு இறுதி முடிவை நோக்கி நகரக்கூடும்.
கவனிக்கும் திமுக
தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளதால், இன்றைய ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
திமுகவின் பிடிவாதம் ஒருபுறம், தவெகவின் அழைப்பு மறுபுறம் என காங்கிரஸ் கட்சி ஒரு முக்கியமான சந்திப்பில் நிற்கிறது. ராகுல் காந்தி எடுக்கப்போகும் முடிவு, வரவிருக்கும் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் கூட்டணிக் கணக்குகளை தலைகீழாக மாற்றுமா என்பது தெரியவில்லை.. ஆனால், இன்று டெல்லி எடுக்கும் ஆலோசனையின் முடிவுகள் வரும் நாட்களில் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி..
இதுபோக தமிழக காங்கிரஸ் கட்சியின் 71 மாவட்டங்களுக்கான புதிய தலைவர்களைக் கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்த நிலையில் அது சம்பந்தமாகவும் பேச போகிறார்கள். இதற்காகவே 71 தமிழக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்றிருக்கிறார்கள்..பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications