தல ரசிகன்..தளபதி தொண்டன்! சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா.. நாளை தவெக மாநாடு! ஒன்னு கூடிட்டாங்களே!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகன், விஜய்யின் தொண்டன் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் சமூக வலைதளங்கள் கவனம் பெற்றுள்ளது. ரசிகர்களாக அடித்துக் கொண்டவர்கள் அரசியலில் ஒன்று சேர்ந்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது.

தற்போது மாநாட்டுக்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் விழுப்புரம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். நாளை தான் மாநாடு என்றாலும் இப்போதே அங்கு கூட்டம் களைகட்டுகிறது.
இந்நிலையில் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மாநாட்டுக்கு மது அருந்தி விட்டு வரக்கூடாது, மீறி மது அருந்தி விட்டு வந்தால் மாநாட்டு திடலுக்குள் வர அனுமதி மறுக்கப்படும், மூத்த குடிமக்கள், மகளிர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை பாதுகாப்புடன் அழைத்து வர வேண்டும், மாநாட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வருபவரோடு பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து வர வேண்டும், போக்குவரத்து விதிகளை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட மாநாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை விஜய் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
மாநாட்டுக்காக பந்தல் மேடை மற்றும் பார்க்கிங் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமாக ஆடியோ லாஞ்சகர்களின் ரசிகர்களை மேடையில் இருந்து சந்திக்கும் விஜய் அரசியல் கட்சி மாநாட்டில் ராம்ப் வாக் மூலம் மாநாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். காலையே மாநாடு தொடங்கினாலும் மாலை 6 மணிக்கு விஜய் உரையாற்ற துவங்குவார் என கூறப்படுகிறது.
மாநாட்டு மேடையில் சுமார் 2 மணி நேரம் வரை விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருக்கும் 100 அடி பிரம்மாண்ட கொடிக் கம்பத்தில் விஜய் கொடி ஏற்றுகிறார். ஆட்டோமேட்டிக் முறையில் ரிமோட் மூலம் விஜய் அந்த கொடியை ஏற்றுகிறார். மோட்டார் மூலம் கயிறு உயர்த்தப்பட்டு கொடி பறக்கும். அதற்கு சில நிமிடங்கள் ஆகும். அதனைத் தொடர்ந்து விஜய் மாநாட்டு மேடைக்கு வந்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டுக்கு இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி உள்ளனர். ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை தமிழக வெற்றிக் கழகம், தளபதி விஜய் என்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் ஆக்கிரமித்துள்ளது. எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல், வரிசையில் அஜித் விஜய் ரசிகர்கள் எப்போதும் இரு துருவங்கள் ஆகவே செயல்பட்டு வந்திருக்கின்றனர்.
இருவரது படங்களும் வெளியாகும் போது எதிர் தரப்பினர் அவர்களை சமூக வலைதளங்களில் வம்பு இழுப்பது தான் வேலையே. தற்போதும் அந்த மோதல் போக்கு நிலவு வருகிறது. ஆனால் விஜய் அஜித் இருவருமே நல்ல நண்பர்கள். பல தருணங்களில் இருவரும் ஒன்றாகச் சந்தித்து பேசிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் ரசிகர்கள் மோதல் போக்கை கையாளக்கூடாது என அவர்கள் கூறினாலும் அதனை கேட்பது போல இல்லை.
இந்த நிலையில் சினிமா வேறு அரசியல் வேறு என்பது போல அஜித் ரசிகர்களின் செயல் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. தவெகவின் மாநாட்டுக்காக பேனர் அமைத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள். அதில், தல ரசிகன் தளபதி தொண்டன் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது புது அரசியலில் ட்ரெண்டு என பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். எது எப்படியோ இனிமேலாவது விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் அடித்துக் கொள்ளாமல் இருந்தால் சரி.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications