அதை கவனிச்சீங்களா? தவெக விழாவில் எடுத்ததுமே அந்த பேனர் வரிகள்.. விஜய் வெளியிடும் அறிவிப்பு? ஓஹோ
சென்னை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் துவங்கியிருக்கிறது.. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில், இன்றைய கூட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இன்று 2ம வருடம் துவங்குகிறது.. இதற்கான விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியிலுள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது.

இதில் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்வதாக தெரிகிறது. விழாவில் பங்கேற்பவர்களுக்கு ஸ்பெஷல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது... நுழைவு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இந்த விழாவில், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் ஆரம்பமாகி உள்ளது. முதல் கையெழுத்திட்டு விஜய் தொடங்கி வைத்திருக்கிறார். அத்துடன், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே மத்திய, மாநில அரசை கடுமையாக விமர்சித்து பேசக்கூடும் என்று தகவல்கள் பரபரத்த நிலையில், இந்த வாசகங்கள் அதை உறுதி செய்யும் விதமாகவே உள்ளன. இதனால் ஆரம்பமே அதிரடியாக இந்த விழா துவங்கப்பட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர்
வரும் 2026 சட்டசபை தேர்தல் கூட்டணி உட்பட கட்சி தொடர்பாக என்னென்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தெல்லாம்தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசப்போகிறாராம். அத்துடன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் சொல்கிறார்கள்.
இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.. அதேபோல, இந்த விழாவில் கட்சியின் சிறப்பு ஆலோசகரும், தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கலந்து கொள்கிறார். அத்துடன் ஆண்டு விழாவிலும் உரையாற்ற உள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் நேற்றைய தினமே சென்னை வந்தடைந்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. விழா நடைபெறும் இடம் பவுன்சர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. துபாய் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படுகிறார்களாம்..
விழா நடக்க போகும் தனியார் விடுதிக்கு வெளியே தவெக கொள்கைத் தலைவர்களின் படங்களுடன் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.. விழா நடைபெறும் பாதை மற்றும் மேடை ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications