தவெக எல்லாம் ஒரு கட்சியே கிடையாது.. எடப்பாடி பலவீனமாகிவிட்டார்.. விளாசிய மனுஷ்ய புத்திரன்
சென்னை: ‛‛தவெக ஒரு கட்சியே கிடையாது. ஒருவர் கழுத்தில் அதிமுக துண்டு போட்டு கையில் தவெக கொடியை காட்டுகிறார். யாரோ ஒருவர் கூட்டத்தில் தவெக கொடி வைத்துள்ளதை பார்த்து கூட்டணி என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு பலகீனமான நிலையில் உள்ளார்'' என கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரது பிரசாரத்தில் தவெக கொடியை சிலர் அசைக்கின்றனர். இதனால் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். அதாவது அதிமுக கூட்டணியில் தவெக இணைவதற்கான பிள்ளையார் சுழி போட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தமிழக அரசியலில் பேசும் பொருளாகி உள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பிறகு தவெக தலைவர் விஜய் தனது பிரசாரத்தை ஒத்திவைத்துள்ளார். பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையே தான் அதிமுக, தவெகவை கூட்டணிக்குள் கொண்டு வர தீவிரமாக முயன்று வருகிறது.
இப்படியான சூழலில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரத்தில் தவெக கொடியை சிலர் காண்பிப்பது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இதுபற்றி கவிருஞம், எழுத்தாளரும், திமுகவின் ஆதரவாளருமான மனுஷ்ய புத்திரன் ‛ஒன் இந்தியா தமிழ்' ஊடகத்துக்கு சிறப்பு பேட்டியளித்தார்.அப்போது அவரிடம், ‛‛கரூர் கொடுந்துயரத்தை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எடுத்து செல்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தனது பிரசாரத்தின்போது கிட்டத்தட்ட தவெகவிற்கும், அதிமுகவிற்கும் கூட்டணி இருக்கிற தொனியில் பேசியிருக்கிறார். இதுபற்றி எப்படி பார்க்கிறீர்கள்?'' என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு மனுஷ்ய புத்திரன், ‛‛நீங்கள் கரூர் கொடுந்துயரத்தை குறிப்பிட்டீர்கள். நான் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலை தான் கொடுந்துயரமாக பார்க்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி இவ்வளவு பரிதாபமான நிலைக்கு செல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதாவது இன்று காலையில் வீடியோ பார்த்தேன். யூடியூப் சேனலில் ஒரு அம்மா விஜய் வீட்டு வாசலில் இருந்து ஜெயலலிதா ஆவியுடன் பேசினேன். அவங்க விஜய்க்கு சேதி சொல்லி அனுப்பி உள்ளதாக கூறி விஜய் வீட்டு வாசலில் நிற்கிறது. அப்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு சேதியை ஜெயலலிதா சொல்லியிருந்தால் எப்படி இருந்த கட்சியை எங்கே கொண்டு வந்து வந்து நிறுத்தி இருக்கிறாய் என்று தான் கேட்கும்.
எதிர்தரப்பில் என்ன நடந்தாலும் சரி.. திமுக பயந்துவிட்டதா? என்று கேள்வி கேட்கிறார்கள். ஒருவர் கழுத்தில் அதிமுக துண்டு போட்டு கையில் தவெக கொடியை காட்டுகிறார். எப்படி ஒருவர் இரண்டு கட்சியில் இருக்க முடியும். இது விரோத அரசியல். தமிழ்நாட்டில் நடக்காத பல விஷயங்கள் நடக்கிறது. தவெக புதிய அரசியலை கொண்டு வந்தாங்க என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். கட்சி கொடி என்பது ஒரு உயிர் மாதிரி. ஒருவரின் உடலில் 2 ஆவி வாழ முடியாது.
அதனை பார்த்து ஒரு தலைவர் ஆர்ப்பரிக்கிறார். அதுதான் ரொம்ப பாவமாக இருந்தது. ஏன் என்றால் இவர் சொல்கிற கட்சியின் தலைவர், நிர்வாகிகள் எங்கு இருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. போலீஸ் அவர்களை தேடுகிறது. கடலுக்குள் புஸ்ஸி ஆனந்த் ஒழிந்துள்ளதாக செய்திகள் வருகிறது. இதனை புதிதாக நான் பார்க்கிறேன். கடற்படையின் கட்டுப்பாட்டில் கடல் உள்ளது. வந்தால் மத்திய அரசு தான் வர வேண்டும் என்று நினைத்து இருக்கலாம்.
ஒரு பக்கம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்ற தகவல் செய்தி வருகிறது. வதந்தி, யூகத்தின் அடிப்படையில் ஒரு கட்சி வலம் வருகிறது என்றால் அது தமிழக அரசியலில் புதிதாக உள்ளது. யாரோ ஒருவர் கூட்டத்தில் தவெக கொடி வைத்துள்ளதை பார்த்து கூட்டணி என்று சொன்னால் எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு பலகீனமான நிலையில் உள்ளார் என்பதை பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார தவெக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. எடப்பாடி பழனிச்சாமி ரொம்ப பாவம்.
ஒரு கட்சி இன்னொரு கட்சியை கூட்டணிக்கு அமைத்தால் இரண்டாம் கட்ட தலைவர்கள், பொதுவாக இருக்கும் பத்திரிகையாளர்கள் தான் பேசுவார்கள். கூட்டத்தில் திமுகவின் கொடியை யாராவது காண்பித்தால் திமுகவுடன் கூட்டணி அமைந்து விட்டது என்று சொல்வாரா?. தவெக சிக்கலில் உள்ளது. அதனை கார்னர் செய்துவிட்டதாக வைத்து கொண்டார் யார் கூட்டணி நோக்கி செல்ல வேண்டும். தவெக தான் செல்ல வேண்டும். ஆனால் தவெகவை யார் கூட்டணி கூட்டணிக்கு அழைக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி தான் வாங்க வாங்க என்று கூட்டணிக்கு அழைக்கிறார். இதில் அடிப்படை பிரச்சனை இருக்கிறது.'' என்று கூறினார்.
-
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்?












Click it and Unblock the Notifications