Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''தமிழக சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி செல்வது தான் சரி. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ரூ.5 கோடி வரை செலவிட வேண்டும். அவ்வளவு பணம் செலவழிக்கும் வேட்பாளர்கள் இல்லை. இதனால் கூட்டணி செல்வது தான் சரி'' என்று தவெக மாவட்ட செயலாளர்கள், பொதுச்செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்திடம் கூறியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தன்னுடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தவெக தலைவர் விஜய் அறிவித்தார். ஆனால் தற்போது வரை யாரும் கூட்டணி சேரவில்லை.

இதையடுத்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்டவற்றுக்கு நான் தான் மாற்று கட்சி. தேர்தலில் தனித்து தவெக போட்டியிடும் என்று அறிவித்தார்.

vijays-tvk-leaders-says-we-dont-have-candidates-who-ready-to-spent-upto-rs-5-crore-for-election-in

புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை

ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர்களின் நிலைப்பாடு மாறி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நேற்றைய தினம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆன்லைனில் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பலரும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவது தான் சரி என்று கூறியுள்ளனர்.

இந்த மீட்டிங்கில் பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் வேட்பாளரின் பிரசார செலவு ரூ.40 லட்சம் என்ற அளவில் தான் தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் களநிலவரம் வேறு. உண்மையான செலவு ரூ.40 லட்சத்தை தாண்டி கோடிகளை தொடும் நிலையில் அதனை காரணம் காட்டி கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

வேட்பாளர்கள் இல்லை

இதுதொடர்பாக தவெகவை சேர்ந்த ஒருவர், '' தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட சுமார் ரூ.5 கோடி வரை செலவிட வேண்டும். ஆனால் அவ்வளவு பணம் செலவிடும் அளவுக்கு வேட்பாளர்களை கண்டுப்பிடிப்பதில் பல மாவட்டங்களில் சிரமம் நிலவுகிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தேர்தலில் போட்டியிட ஏராளமானவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பிரசாரம் உள்பட பிற விஷயங்களுக்கு செலவிடும் வகையிலான வேட்பாளர்களாக அவர்கள் இல்லை. மிக குறைந்த அளவில் தான் அத்தகைய வேட்பாளர்கள் உள்ளனர். அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைப்பது கட்சியின் கொள்கைக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால் பணம் இல்லாததால் இதனை பரிசீலனை செய்ய வேண்டும்'' என கூறியுள்ளார்.

வருத்தப்பட்ட நிர்வாகி

அதேபோல் இன்னொரு தவெக நிர்வாகி, ''நமது பிரசாரங்களுக்கு நிதி திரட்டக்கூடிய வேட்பாளர்களை கண்டறிய முடியவில்லை இதனால் கூட்டணிக்கு செல்ல வேண்டும்'' என்று கூறியுள்ளார். அதேவேளையில் இன்னொருவரோ, ''தேர்தலுக்குத் தயாராகும் கட்சி பணபலம் கொண்ட வேட்பாளர்கள் இல்லை என்று இப்போது எப்படி சொல்ல முடியும். இதனை சில மாதங்களுக்கு முன்பே உணர்ந்திருக்க வேண்டும்'' என்று வருத்தத்தை பதிவு செய்தார்

கூட்டணி தவிர வேறு வழியில்லை

அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ''அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூட்டணிக்கு அணுகினார்'' என்றார். மேலும் பல தலைவர்கள், ''தவெக கட்சி திறம்பட தேர்தலில் போட்டியிட விரும்பினால் பெரிய கூட்டணியில் இணைவது தவிர வேறு வழியில்லை'' என்று கூறியுள்ளனர்.

விஜய்க்கு துணை முதல்வர் கிடைக்குமா?

அதேவேளையில் சிலர், ''முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்றால் தவெகவிற்கு ஏன் மக்கள் வாக்களிக்க போகிறார்கள்?'' என்ற கேள்வியையும் முனவைத்தனர். அதோடு, ''அதிமுக - பாஜக கூட்டணியில் தவெகவிற்கு போதிய அளவு இடம் கிடைக்குமா? குறைந்தபட்சம் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா?'' என்று கேள்வி எழுப்பினர்.

தவெக - பாஜக பேச்சுவார்த்தை

தற்போது தவெகவை அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாஜக அழைத்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இருதரப்புக்கும் தெரிந்த தொழிலதிபர்கள், திரைத்துறையில் உள்ளவர்கள் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை விஜய் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை. அதேபோல் தவெகவை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி ஆர்வமாக இல்லை என்று கூறப்படுகிறது.

தவெக கூட்டணிக்குள் வந்தால் வெற்றி உறுதி என்றாலும் கூட அந்த கட்சிக்கு கூடுதல் இடங்கள் வழங்க வேண்டும். இதனால் அதிமுக தான் போட்டியிடும் இடத்தை குறைக்க வேண்டும். இது தேர்தல் வெற்றிக்கு பிறகு கூட்டணி ஆட்சியை நோக்கி செல்லலாம் என்பதால் எடப்பாடி பழனிச்சாமி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

மூத்த தலைவர் மாறுபட்ட கருத்து

மேலும் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்வது தொடர்பாக விஜயிடம் தெளிவான முடிவு இல்லை. அதேபோல் விஜயுடன் நெருங்கி இருக்கும் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் அருண் ராஜ் ஆகியோரிடமும் இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. முதலில் ஜான் ஆரோக்கியசாமி, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது புஸ்ஸி ஆனந்த் கூட்டணியை விரும்புவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தவெக தலைவர்களின் கருத்து வேறுபாட்டால் அந்த கட்சி தேர்தலில் கூட்டணியில் களமிறங்குகிறதா? தனித்து களமிறங்குகிறதா? என்பதை அறிய நாம் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+