இன்று தேர்தல் வைத்தாலும்.. திமுக கூட்டணி ஸ்வீப் அடிக்கும்! தவெகவுக்கு 3வது இடம்! கணிப்பில் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தல் நடந்தாலும் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என இந்தியா டுடே, சி வோட்டர்ஸ் கணிப்பை வெளியிட்டிருக்கிறது. அதேபோல தவெகவுக்கு 3வது இடம் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் வெற்றிபெறும் என கணிப்பு. தவெக 15% வாக்குகளை பெறும் எனவும் கணிப்பு வெளியாகியுள்ளது.

Vijay s TVK

வழக்கமாக மக்களவை தேர்தலுக்கு முன்னரும், பின்னரும்தான் கருத்துக்கணிப்புகள் வெளியாகும். ஆனால், இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்தும் 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக்கணிப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெளியாகும். அந்த வகையில், தற்போது மக்களவை தேர்தல் நடத்தப்பட்டால், என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டியும், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை ஒட்டியும் மக்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிய, இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் நடந்தாலும், 45% வாக்குகளுடன் திமுக கூட்டணி 38 தொகுதிகளிலும், 33% வாக்குகளுடன் அதிமுக கூட்டணி ஒரே ஒரு தொகுதியில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா டுடே ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கணிப்புகளின்படி, தவெக வரவிருக்கும் தேர்தலில் 15% முதல் 20% வரை வாக்கு சதவிகிதத்தைப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக தரப்பில் எடுக்கப்பட்ட ஒரு ரகசியக் கணிப்பில், தங்களுக்கு 30% வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது 15% மட்டும் வாக்கு சதவிகிதம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. தவெக பெறும் வாக்குகள் பிரதானமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் சரிவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டுமல்லாது 2026 தேர்தலில் திமுக கூட்டணி ஒரு வலுவான நிலையில் இருந்தாலும், விஜய்யின் தவெக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்து வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தைச் செய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+