ரிப்பீட்டு.. நிலவில் 2 வது முறை தரையிறங்கிய விக்ரம் லேண்டர்! சந்திரயான் 3-ன் போனஸ் சோதனை வெற்றி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் 2வது முறையாக வெற்றிகரமாக தரையிறக்கி சாதித்து இருக்கிறது இஸ்ரோ. 14 நாட்கள் சோதனை நிறைவடைந்த பிறகும் ரோவரும், லேண்டரும் தொடர்ந்து இயங்கி வந்ததால் மீண்டும் மேலே எழுப்பி வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதித்து உள்ளது.

சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய திட்டங்களை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் இருண்ட பகுதியான தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 Vikram lander of Chandrayan 3 soft landed 2nd time in Moon

சந்திரயான் 3 விண்கலம் 5 முறை பூமியின் நீள் வட்டப் பாதையில் சுற்றி, அதன் பின்னர் நிலவின் ஆர்பிட்டுக்குள் நுழைந்து பல நாட்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றியது. கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி மாலை அது வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் நிலாவை தொட்டதன் மூலம் நிலவிற்கு விண்கலம் அனுப்பிய 4 வது நாடு என்ற பெருமையையும், விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிலை நிறுத்திய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்று உள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியாகி ஆய்வை தொடங்கி உள்ளது. லேண்டரில் இருக்கும் chaSTE, ILSA, RAMBHA, ஆகியவை இணைக்கப்பட்டது. குண்டு குழியுமான நிலவின் மேற்பரப்பு, விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் என அனைத்தையும் புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பிரக்யான் ரோவர் பதிவு செய்து இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நிலவில் ஹீலியம், சல்பர் உள்ளிட்ட பல்வேறு கணிமங்கள் இருப்பதையும் பிரக்யான் ரோவர் கண்டிபிடித்தது. இதுவரை விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தைவிட்டு நகராமல் அதே இடத்தில் இருந்தபடி பிரக்யான் ரோவர் மட்டுமே வேறு இடங்களுக்கு நகர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது.

இந்த நிலையில், நிலவில் இரவு பொழுது தொடங்கியுள்ளதால் பிரக்யான் ரோவர் உறக்க நிலைக்கு சென்று உள்ளது. சந்திரயான் 3 விண்கலம் எந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்டதோ, அதை நிறைவு செய்து 100 சதவீதம் இதில் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், விக்ரம் லேண்டரை மேலே எழுப்பி மீண்டும் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க சாதித்து இருக்கிறது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் இஸ்ரோ, "2 வது முறையாக நிலவில் விக்ரம் லேண்டர் சாஃப்ட் லேண்ட் செய்தது. 30 செண்டி மீட்டர் அளவுக்கு லேண்டர் மேலே உயர்த்தப்பட்டு 40 சென்டி மீட்டர் தொலைவுக்கு நகர்த்தப்பட்டு தரையிறக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது. லேண்டரில் இருந்த 3 ஆய்வுக் கருவிகளும் மீண்டும் முழுமையாக செயல்படுகிறது." என்று தெரிவித்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+