விக்கிரவாண்டி பரிதாபம்: ஒரு பூத்துக்கு 100 பேர் கூட சீமான் தங்கை அபிநயாவுக்கு ஓட்டுப் போடலையே!
சென்னை: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பரிதாப தோல்வியைத் தழுவியுள்ளார். டெபாசிட் தொகையையும் அபிநயா பறிகொடுத்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின் ஒவ்வொரு சுற்றிலும் பெரும்பாலான பூத்துகளில் 100-க்கும் குறைவாக சொற்ப வாக்குகளைத்தான் பெற்றிருந்தார் அபிநயா.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். பாமக வேட்பாளர் அன்புமணி 56,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று டெபாசிட்டைத் தக்க வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா உள்ளிட்டோர் தோல்வியைத் தழுவி டெபாசிட் தொகையையும் பறிகொடுத்தனர்.

தீவிர பிரசாரம்: நாம் தமிழர் கட்சி ஒட்டுமொத்தமாக விக்கிரவாண்டி தொகுதியில் இறங்கி பிரசாரம் செய்தது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு ஒவ்வொரு நாளும் பொதுக் கூட்டம் நடத்தினார். வேட்பாளார் அபிநயா ஒவ்வொரு திமுகவினர் வீட்டுக்கும் சென்று ஒரே ஒரு முறை எனக்கு ஓட்டுப் போடுங்கள் என பிரசாரம் செய்தார். ஆளும் திமுக தலைவர்களை மிக இழிவாக பேசி நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். நாம் தமிழர் கட்சியினரின் இத்தனை பகீரத முயற்சிக்கும் என்ன பலன் கிடைத்தது?
மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் 5 சுற்றுகளில் பூத்துகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா பெற்ற வாக்குகள் விவரங்களை மட்டும் பார்ப்போம்.
சுற்று 1: வாக்கு எண்ணிக்கை சுற்று 1-ல் அபிநயா மொத்தம் 303 வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 14 பூத்துகளில் பதிவான வாக்குகள். இதில் ஒரு பூத்தில் கூட அபிநயா 52-க்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறவில்லை. 2 பூத்துகளில்தான் 52 வாக்குகளைப் பெற்றார். மிக குறைவாக ஒரு பூத்தில் 8 வாக்குகள் மட்டுமே அபிநயாவுக்கு கிடைத்திருந்தது.
சுற்று 2: வாக்கு எண்ணிக்கை சுற்று 2-ல் அபிநயா பெற்ற வாக்குகள் மொத்தம் 546. இந்த சுற்றில் அபிநயா பெற்ற அதிகபட்ச வாக்கு 82. குறைந்த பட்ச வாக்கு 9.
சுற்று 3: வாக்கு எண்ணிக்கை சுற்று 3-ல் அபிநயாவின் மொத்த வாக்குகள் 534. மிக அதிகபட்சமாக 126 வாக்குகளை ஒரு பூத்தில் அபிநயா பெற்றிருந்தார். ஒரு பூத்தில் வெறும் 12 ஓட்டுகள்தான் அபிநயாவுக்கு கிடைத்திருந்தது.

சுற்று 4: வாக்கு எண்ணிக்கை சுற்று 4-ல் மொத்தம் 380 ஓட்டுகளைப் பெற்றார் அபிநயா. மிக அதிகபட்சமாக ஒரு பூத்தில் 93 வாக்குகள் அவருக்குக் கிடைத்தது. மிக குறைந்தபட்சமாக ஒரு பூத்தில் 9 ஓட்டுகள்தான் கிடைத்தது.
சுற்று 5: வாக்கு எண்ணிக்கை சுற்று 5-ல் மொத்தம் 512 ஓட்டுகளைப் பெற்ற அபிநயாவுக்கு ஒரு பூத்தில் 107 வாக்குகள் கிடைத்தன. மிக குறைந்தபட்சமாக இந்த சுற்றில் ஒரு பூத்தில் வெறும் 7 ஓட்டுகள்தான் அபிநயாவுக்கு கிடைத்தது. இதே நிலைமைதான் எஞ்சிய 15 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும்.
சிங்கிள் ஓட்டு கூட கிடைக்கலையே: நாம் தமிழர் கட்சி தமது முழு பலத்தையும் விக்கிரவாண்டியில் இறக்கியது. இதற்கும் மேலாக அதிமுக, தேமுதிக வாக்குகளையும் தங்களுக்கே தரும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார் சீமான். ஆனாலும் அதிமுக, தேமுதிகவின் சிங்கிள் வாக்கு கூட நாம் தமிழருக்கு கிடைக்கவில்லை என்பதையே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தி இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications