விஜய்க்கு நெருக்கடி? தவெகா முதல் மாநாட்டுக்கு அனுமதி.. 17 நிபந்தனை விதித்த போலீஸ்.. என்னென்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27ம் தேதி நடத்துவதற்கு விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். இந்த மாநாட்டை நடத்துவதற்கு 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27 ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக கட்சி தலைவர் விஜய் அறிவித்திருந்தார்... எனவே இந்த மாநாடு நடத்துவதற்கு காவல்துறை சார்பில் அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கட்சி சார்பில் கோரப்பட்டது.

vijay

ஆம்புலன்ஸ்: கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், கட்சி நிர்வாகிகள் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 21-ம் தேதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம், அனுமதி கேட்டு கடிதம் வழங்கப்பட்டிருந்தது.. கடிதத்தினை பரிசீலனை செய்த காவல்துறையிடம் ஏற்கனவே மாநாடு நடத்த 33 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்ததில் சில தளர்வுகள் அளிக்க வேண்டுமென கேட்டிருந்தனர்.

பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதியிருந்தார்.. அதில் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்றெல்லாம் கேட்கப்பட்டிருந்தது.

மாநாட்டுக்கு அனுமதி: இந்நிலையில், அக்டோபர் 27ம் தேதி நடத்துவதற்கு விக்கிரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அனுமதி அளித்துள்ளார். மேலும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 33 நிபந்தனைகளில், 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

- மாநாடு நடைபெறும் நாளன்று போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

- வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்

- சாலைகளின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தக் கூடாது

- கட்டாயம் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்களுக்கு தடுப்புடன் கூடிய இருக்கை வசதிகள், மருத்துவ வசதியுடன்கூடிய ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள், மாநாட்டு திடலில் நிறுத்த வேண்டும்.

- குடிநீர் வசதி, கழிவறை வசதி, உணவு சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும்

- பேனர், வளைவுகள் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கக் கூடாது

- முக்கிய தலைவர் விஜய் மாநாட்டிற்கு வரக்கூடிய வழிகளில் தடுப்புகள் அமைத்திருக்க வேண்டும்.

கேமராக்கள்: மாநாடு திடலில் எல்இடி திரைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் வைப்பதோடு, திறந்தவெளி கிணறுகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில், 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்து, மாநாட்டுக்கு அனுமதி தந்திருப்பது பெரும் மகிழ்ச்சியை விஜய் கட்சியினருக்கு ஏற்படுத்தியிருக்கிறது.. மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த நிபந்தனைகளும் இடம்பெற்றுள்ளன.

ஜரூர் பணிகள்: தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மாநாட்டு வேலைகளில் விஜய் தரப்பினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+