Vinayaka Chaturthi: விநாயகர் சதுர்த்தி! இதெல்லாம் செய்யவே கூடாது.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் கறார் உத்தரவு
சென்னை: ஆக.27ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் இந்த விழாவில் பயன்படுத்தப்படும் விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் மாசை ஏற்படுத்துகின்றன. எனவே இதனை தடுக்க தமிழக அரசு சில முக்கியமான அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விநாயகர் சிலைகளைச் செய்ய, களிமண், வைக்கோல் மற்றும் மக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலி கலவைகள்) போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்த கூடாது.
சிலைகளுக்குப் பளபளப்பான தோற்றத்தைக் கொடுக்க, மரங்களிலிருந்து கிடைக்கும் இயற்கை பிசின்களைப் பயன்படுத்தலாம். சிலைகளின் ஆபரணங்களை வடிவமைக்க, உலர்ந்த மலர் கூறுகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
சிலைகளுக்கு வர்ணம் பூச, நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம், எண்ணெய் வண்ணப் பூச்சுகள், எனாமல் மற்றும் செயற்கை சாயங்களை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.அதற்குப் பதிலாக, நீர் சார்ந்த மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.பந்தல்கள் மற்றும் அலங்காரங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி, நீர் நிலைகள் மாசுபடாதவாறு சிலைகளை பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications