மக்களின் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு... இனி தொட்டதெல்லாம் தங்கம்தான்... சொல்வது யாருனு பாருங்க!
சென்னை: வீட்டுக்குள் இருந்து கொண்டு வீடியோ காலில் விடியலை தேடாமல், மக்களில் ஒருவனாய் வீதிக்கு வந்து பரப்புரை ஆற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொட்டதெல்லாம் வெற்றியே என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்சியை சாகடித்து சவடால் பேசுபவர் அல்ல எனவும் தந்தையே நம்பாத மகனும் அல்ல என்றும் விந்தியா கூறினார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பிரசாரத்தை துவக்கி உள்ளன. திமுக தரப்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார்.அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான விந்தியா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்ட பதில் அவர் கூறுகையில், வாரீசு கோட்டாவில் வளர்ந்த மாறனோ பேரனோ அல்ல, சாட்சியை சாகடித்து சவடால் பேசுபவர் அல்ல, தந்தையே நம்பாத மகனும் அல்ல, வீட்டிற்குள் இருந்து கொண்டு வீடியோகாலில் விடியலை தேடாமல் மக்களில் ஒருவனாய் வீதிக்கு வந்து பரப்புரை ஆற்றும் எங்கள் மக்களின் முதல்வருக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றியே... என விந்தியா கூறி உள்ளார்.இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications