Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிர்ச்சி.. மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு.. இந்திய வீராங்கனை வினேஷ் போகத் சோக அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார். மல்யுத்தம் தன்னை வீழ்த்திவிட்டதாக வினேஷ் போகத் வேதனையுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு மேல் போராட தன்னிடம் பலம் இல்லை என வினேஷ் போகத் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

வினேஷ் போகத் மேல்முறையீடு மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Olympics 2024 Vinesh Phogat Paris Olympics 2024 Wrestling 2024 2024

வினேஷ் போகத் மேல்முறையீடு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மேல் முறையீடு செய்த நிலையில், சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அதை விசாரிக்கிறது. இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

25 நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார் வினேஷ் போகத்.

ஒலிம்பிக் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்த வினேஷ் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை வரவழைத்து உள்ளது. கடந்த ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகியை தோற்கடித்த முதல் சர்வதேச மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையையும் செமி பைனலில் இவர் பெற்றார்.

இருப்பினும், இறுதிப் போட்டியின் முன் காலை எடையின் போது நிர்ணயிக்கப்பட்ட எடையை விட சுமார் 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனவே இறுதிப்போட்டியில் போட்டியிடுவதற்கு, பதக்கங்கள் பெறுவதற்கும் தகுதியற்றவர் ஆனார்.

ஒலிம்பிக் சாதனை: 2014, 2018 மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று இவர் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 2016 இல் 48 கிலோ, 2020 இல் 53 கிலோ மற்றும் 2024 இல் 50 கிலோ என மூன்று வெவ்வேறு எடைப் பிரிவுகளில் போட்டியிட்ட அவர் இந்தியாவின் தலைசிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் ஆவார்.

சர்ச்சை: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு பின்னால் சதி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து காலிறுதியில் நுழைந்தார். அங்கு, உக்ரைன் வீராங்கனை ஒக்ஸானா லிவாச்சை 7-5 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில், கியூபாவின் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைத்திருக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் அவர் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 150 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர், இதில் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

"வினேஷ் போகத் வெற்றியை யாரால் ஜீரணிக்க முடியாதோ அவர்கள்தான் சதி செய்திருப்பார்கள்" என காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசிதரூர் கூறுகையில்,

"இதுவரை நடந்த போட்டிகளில் வினேஷின் வெற்றி மிகவும் வியக்கத்தக்கவகையில் இருந்தது. தைரியத்தை வெளிப்படுத்திய அவர், அனைவரின் இதயங்களையும் வென்றுள்ளார். அவரின் தகுதி நீக்கம் எனக்கு வேதனையளிக்கிறது. அவரின் அனைத்து முயற்சிகளும், உழைப்பும் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை கொடுக்காமல் போனதுதான் எனக்கு வருத்தம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+