பட்ஜெட்: பிடிஆர், அமைச்சர்கள் பற்றி அநாகரீக விமர்சனம் என பிரபல தமிழ் நாளிதழ் மீது உரிமை மீறல் புகார்
சென்னை: தமிழக சட்டசபையில் அமைச்சர்கள் தூக்கி வழிந்ததாக செய்தி வெளியிட்ட பிரபல நாளிதழ் மீது சட்டசபை உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்க சட்டசபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அன்று தமிழக பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து பேசிய போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திக்கித் திணறியதாகவும், தலையை சொறிந்ததாகவும் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அதுமட்டுமல்ல பட்ஜெட் உரையின் போது அமைச்சர்கள் சட்டசபையில் தூங்கி வழிந்து கொண்டிருந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த நாளிதழ் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் சபா ராஜேந்திரன், செல்வப்பெருந்தகை, வேல்முருகன், ஆகியோர் விதி எண் 219ன் கீழ் சட்டசபை உரிமை மீறல் புகாரை எழுப்பியுள்ளார்கள்.
சட்டசபை உரிமை மீறல் புகாரை எழுப்பிய போது பேசிய வேல்முருகன், அவைக்கும், அவையின் மாண்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறினார்.
அமைச்சர்கள் பற்றி அநாகரீக முறையில் விமர்சனம் செய்திருப்பது அவையின் உரிமையை மீறிய செயலாக இருப்பதால் சட்டசபை உரிமை மீறல் புகாரின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதனிடையே 2 நாட்களுக்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினும், பிரபல நாளிதழ் வெளியிட்ட செய்தியையும், தலைப்பையும் குறிப்பிட்டு மிகுந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் பிறகு தான் இந்த விவகாரத்தை இப்படியே விடக்கூடாது என சட்டசபை உரிமை மீறல் புகார் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனிடையே பிரபல நாளிதழ் மீது சட்டசபை உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்க சட்டசபை உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications