இனி ஏரியா சண்டைக்கு நோ! எல்லோரும் பெசன்ட் நகர் வாங்க.. சென்னையில் இப்படி ஒரு ஜாம்பி உலகமா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைவாசி மக்களுக்கு விடுமுறை நாட்கள் என்றால் எப்போதும் கொண்டாட்டம்தான். சண்டே நீங்கள் எந்த பார்க் சென்றாலும் அங்கு விளையாடுவதற்கு இடமே கிடைக்காது.

அதேபோல விளையாட்டு மைதானங்களும், பூங்காக்களும் குறைந்த அளவே உள்ள நிலையில் மக்களின் தேடல் அதிகரித்துள்ளது. எனவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பல்வேறு புதிய விளையாட்டு அரங்குகள் உருவாகி வருகின்றன.

அந்த வகையில் சென்னை மக்களுக்கு புதிய பொழுதுபோக்கு இடம் ஒன்று கிடைத்திருக்கிறது. நேரில் விளையாடி சலிப்புற்றவர்கள் இனி விரிட்சுவல் எனப்படும் மெய்நிகர் விளையாட்டுகளில் பங்கெடுக்கலாம்.

சண்டே

சண்டே

சண்டேவை கறிகொழம்புக்கு நேர்ந்துவிட்டது எப்படியோ அதுபோலதான் பசங்களுக்கான அட்டியும் சண்டேவுக்கென நேந்துவிடப்பட்டுள்ளது. அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் இந்த கொண்டாட்டங்கள் சனிக்கிழமை இரவே சூடுபிடிக்க தொடங்கிவிடும். பைல்ஸ் வந்தவன் பத்துநாள் ஆனாலும் பக்குவமா படுக்கமாட்டான் என்பதை போல, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த றெக்கை இல்லா கோழி சட்டியில் தங்காது என்பது வாஸ்தவம். எனவே எல்லாத்தையும் படைச்சுட்டு ஓய்வெடுக்க போன ஆண்டவனையும் ஒரு ரவுண்டு போயி பாத்துட்டு வரேன்னு ஒரு பேட்ச் கிளம்ப, மீதமுள்ள இளசுகள் கிரவுண்டுதான் கதி என்று விழுந்து கிடப்பார்கள்.

ஏரியா சண்டை

ஏரியா சண்டை

இவர்களை ஆசுவாசப்படுத்த சென்னை சைசுக்கு கிரவுண்டு கட்டினா கூட பத்தாதுன்னுதான் சொல்லுவாங்க. அங்க போயும் ஏரியா பிரச்னையை தோளில் மேல் போட்ட துண்டு போல அப்பப்ப உதறிகொண்டு இருப்பார்கள். ஆக இதெல்லாம் சலிச்சு வாக்கிங் வந்த அங்கிளோட பேசி அவங்க பொண்ணையே காதலிச்சு ஒரு பாதிபேர் எஸ் ஆய்டுவாங்க. ஆனா நம்ம சிங்கிள் பசங்க மட்டும், கரண்ட் கம்பிய விடாத காக்கா மாதிரி பேட்டையே புடிச்சுட்டு இருப்பாங்க.

கேம் சென்டர்

கேம் சென்டர்

ஆனா பாவம் பாருங்க, கொஞ்ச நாள்ல இவங்களுக்கும் இதெல்லாம் சலிப்பு தட்ட, வேற எதையோ தேடிட்டு இருப்பாங்க. இவங்களுக்காகதான் ஒரு புது பொழுதுபோக்கு சென்டர் பெசன்ட் நகர்ல திறக்கப்பட்டிருக்கு. இங்க நீங்க எதிர்பார்க்குற விளையாட்டுகள் விரிட்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் வடிவில் விளையாடும் வகையில் சென்டர் வடிவமைக்கப்பட்டிருக்கு. இதில் ஸாம்பியுடன் சண்டையிடலாம், மட்டுமல்லாது எல்லா வகையான இன்டோர் கேமையும் இங்கு நம்மால் விளைாயாட முடியும்.

 நீங்களும் ஒருமுறை

நீங்களும் ஒருமுறை

ஒவ்வொரு விளையாட்டிலும் நாம் எவ்வளவு பாயிண்ட்களை ஜெயிக்கிறோம் என்பதை வச்சு கடைசியா ஒரு கிஃப்ட் கூட கிடைக்கும். பெசன்ட் நகரில் நாசா ஹப் என்றழைக்கப்படும் இந்த விளையாட்டு சென்டர்தான் தற்போது சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீங்களும் ஒருமுறை இங்கு சென்று விளையாடி பாருங்கள் மக்களே. அங்கேயும் ஏரியா சண்டை போட்டுக்காம விளையாடனும் என்பதுதான் முக்கிய விதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+