"தலையிடாதீங்க யாரும்".. முதல்வர் ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் வைத்த முக்கிய கோரிக்கை..!
விருதுநகர் பாலியல் சம்பவ வழக்கு குறித்து வானதி அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து, பாஜகவின் வானதி சீனிவாசன் மிக முக்கிய கோரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.
விருதுநகரில் நடந்த பாலியல் சம்பவத்தின் கொந்தளிப்பு, தமிழகம் முழுவதும் இன்னும் அடங்கவே இல்லை.. குறிப்பாக விருதுநகர் மக்கள் கடுமையான அதிர்ச்சியில், வருத்தத்தில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில், 8 பேர் மீதும் பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திமுக நிர்வாகி கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் திமுக இளைஞர் அணி நிர்வாகிகளான ஹரிஹரன், ஜுனைத் அகமது போன்றோர் இந்த பெண் மட்டுமல்லாது இப்படி பல பெண்களையும் இதற்கு முன்பு நாசம் செய்துள்ளதாக கூறப்படுவது மேலும் பரபரப்பை கூட்டி வருகிறது.. எனவே, இவரால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்த விவரங்களை போலீசார் சேகரிக்க துவங்கி உள்ளனர்.. பட்டியலின இளம்பெண் மீதான இந்த பாலியல் அத்துமீறல் கொடுமை வெடித்து கிளம்பியபோதே, பாஜக இதை கையில் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியது.

பாஜக முடிவு
எனவே, விரைவில் திமுக அரசை கண்டித்தும், திமுக நிர்வாகிகளால் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் அத்துமீறலை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. இந்நிலையில்தான், பாஜகவின் மகளிரணி தேசியத் தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும் என்று மிக முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன்
இதுதொடர்பாக, வானதி ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில் உள்ளதாவது: "விருதுநகரில் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண்ணை மிரட்டி திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 8 பேர் தொடர்ந்துபல மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இளம் பெண்ணை சீரழித்த மனித மிருகங்கள் அனைவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மரண தண்டனை
அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணையை முடுக்கி விட வேண்டும்.. இதுபோன்ற கொடூரமான குற்ற வழக்குகளை, கால தாமதமின்றி விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும். பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழல் உருவாகவில்லை என்பதையே, விருதுநகரில் நடந்த இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

பாரபட்சம்
எனவே, பாதிக்கப்படும் பெண்கள், தைரியமாக புகார் கொடுக்கும் அளவுக்கு சூழலை காவல் துறையும், தமிழக அரசும் உருவாக்க வேண்டும். இனி, இதுபோன்ற கொடூரங்கள் நடக்காதவாறு உறுதியான நடவடிக்கைகளை காவல் துறையும், தமிழக அரசும் எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. வானதியின் இதே கோரிக்கையைதான், பாரபட்சமின்றி அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர்.. எனினும், இந்த விஷயம் வெளியானதுமே 8 பேரை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன் சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகியை கட்சியில் இருந்தே நீக்கி உள்ளனர்..

முதல்வர் ஸ்டாலின்
எல்லாவற்றிற்கும் மேலாக, "விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என்று டிஜிபியிடம் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. அந்த வகையில், அரசியல் தலையீடு இல்லாமல், விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை தரப்படும் என்று நம்பப்படுகிறது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications