சென்னையில் அதிர்ச்சி.. டிப்பர் லாரி மோதி மாலை முரசு டிவி நிருபர் உயிரிழப்பு
சென்னை: மாலை முரசு தொலைகாட்சி செய்தியாளர் செந்தில்குமார் சென்னையில் இன்று நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 38.
மாலைமுரசு தொலைகாட்சியின் தாம்பரம் பிரிவு செய்தியாளராக பணியாற்றியவர், செந்தில்குமார் (38 ). வண்டலூரில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை செய்தி சேகரிக்க, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி ஒன்று, செந்தில்குமார் பைக் மீது மோதியது. இந்த சம்பவத்தில், செந்தில்குமார்
பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் பலியான செந்தில்குமார் திருமணமானவர். செந்தில்குமாருக்கு, மனைவியும், 11 வயதில் ஒரு மகன், 8 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

செந்தில்குமார் மறைவால், அவரது குடும்பம் கதிகலங்கி நிற்கிறது. விபத்தில் செய்தியாளர் பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது . செந்தில்குமாரின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மறைந்த, செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்கிட வேண்டும். செய்தியாளர் செந்தில்குமார் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகள் செய்வோம். துணை நிற்போம். துயரத்தில் பங்கேற்போம் என்று தெரிவிகக்கப்பட்டுள்ளது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications