Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவேக் டூ விஜயகாந்த்.. ஜெ டூ எஸ்பிபி: 'ராயல் சென்ட் ஆப்’ தந்தவர் இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி கணேசன் தொடங்கி ஜெயலலிதா வரை இறுதி ஊர்வலத்தையும் அடக்கம் செய்யும் பெட்டியையும் செய்துகொடுத்தவர் நெகிழ வைக்கும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிவாஜி முதல் ஜெயலலிதா வரை பலரது உடலை அடக்கம் செய்ய எடுத்துப் போகும்போது அந்த அமரர் ஊர்திகள் தனித்துத் தெரிவதைப் பலரும் அடையாளம் கண்டிருக்கலாம். அதில் Flyinng Squad என்று எழுதி இருப்பதை சில ஆயிரம் பேராவது அறிந்து வைத்திருக்கலாம். சிவாஜி தொடங்கி ஜெயலலிதா வரை பல தலைவர்களுக்கு ராயல் சென்ட் ஆப் கொடுத்து மரியாதையாக அனுப்பிவைத்த பெருமை இதற்கு உண்டு.

Flying Squad Chennai

இப்போது இந்த நிறுவனம் புதியதாக அரசுடன் கைகோர்த்து ஒரு சேவையை தொடங்கி உள்ளது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் அமரர் அறையை உருவாக்கி உள்ளது. இதில் ஒருவரின் உடலை மாதக்கணக்கில் வைத்துப் பாதுகாக்க முடியும்.

சாந்தகுமார், "இன்றைக்குக் கலாச்சாரம் மாறிவிட்டது. பெற்றோர் ஒரு பக்கம், பிள்ளை வேறு ஒரு பக்கம் என்று சிதறி வாழ்கிறார்கள். தங்களின் பெற்றோர் மறையும் போது அவர்கள் உடன் இருப்பதில்லை. வெளிநாட்டில் இருக்கிறார்கள். உடனடியாக அவர்களால் வர முடிவதில்ல. அண்டை வீட்டார் ஒருவர் இறந்த உடன் அடுத்த நாளே எடுக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து வருவதற்குள் அடக்கம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. அதை மாற்றவே இந்த அமரர் அறையை அரசுடன் சேர்ந்து தொடங்கி உள்ளோம். இதில் ஒருவரின் உடலை 50 நாட்கள் வரை வைத்துப் பாதுகாக்க முடியும்" என்கிறார்.

Flying Squad Chennai

இவரது நிறுவனம்தான் சிவாஜி கணேசன், ஜி.கே. மூப்பனார், ஜெயலலிதா, பி.வி.நரசிம்மராவ், மு.கருணாநிதி, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் கரீமா பேகம், நடிகர் சோ, விஜயகாந்த் என பல பிரபலங்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் அடக்கம் செய்துள்ளது. அது பற்றி சாந்தகுமார், "மு.கருணாநிதியின் மரணத்தின் போது ஏற்பட்ட போராட்டம் பற்றி நாடே அறியும். காவேரி மருத்துவமனையிலிருந்து அவரது உடலை எனது வாகனத்தில் கொண்டு வந்தேன். அப்போது நானே வண்டியை ஓட்டினேன். நான் Steering மட்டும்தான் பிடித்திருந்தேன். மக்கள் கூட்டமே வண்டியை பதுசா தள்ளிக் கொண்டு வந்துவிட்டது.

மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் பிறகு அங்கிருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் இடம் மீண்டும் மெரினா வரை நானே அவரை தொட்டு இறக்கி அடக்கம் செய்யும் வரை பல வேலைகள் செய்தேன். அது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஜெயலலிதா உடலைப் பாதுகாக்க மட்டும் எங்கள் குளிரூட்டும் பெட்டியை அளித்தோம். அவரது ஆட்சியில் நடந்ததால் ராணுவமே பாதி வேலையைச் செய்துவிட்டது. எங்களுக்கு வேலை குறைவுதான்.

நெல் ஜெயராமன் இறந்தபோது அவரது உடலை எங்கள் வாகனத்தில் வைத்துத்தான் அவரது சொந்த ஊருக்குக் கொண்டுபோனோம். அதற்கான செலவை சிவகார்த்திகேயன் தான் கொடுத்தார். என் வாழ்வில் மிகத் துயரமான மரணம் எஸ்.பி.பிதான். பல நூறு கிமீட்டர் நாங்கள் அலுப்பு இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு அவர்தான் வழித்துணை. அவரது பாடல் இல்லாமல் எங்கள் பயணம் இனிமையாக இருக்காது. அவரது உடலை வைத்து வண்டியைக் கொண்டு போனபோது பல ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் கடலில் மிதந்தார்கள்.

Flying Squad Chennai

சிவாஜி உடலை மருத்துவமனையிலிருந்து அவரது வீட்டுக்குக் கொண்டு போகும்போது லேசான தூரல் விழுந்தது. அதேமாதிரி கலைஞரை மெரினாவுக்குக் கொண்டு போகும் போது லேசான தூரல் விழுந்தது. இந்த இருவருக்கும் இயற்கையே கண்ணீர் வடித்தது. சிவாஜி உடலை ஏற்றிக் கொண்டு உஸ்மான் ரோட்டில் இருந்து பெசண்ட்நகர் போவதற்கு 6 மணிநேரம் ஆனது. அவ்வளவு கூட்டம். போகும் சாலையில் நடுவே வீல் சேரில் வந்து சிவாஜியின் உடலை நடிகை பண்டரிபாய் பார்த்தார்.

இதேபோல நடிகை பத்மினி இறந்தபோது நடிகை ஷோபனா அவரது முகத்திற்கு மேக் அப் போட்டார். இரவு 12 மணிக்குக்கூடத் தன்னை அழகாகக் காட்டிக் கொள்ளக் கூடியவர் அவர். எனவே அவரது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று செய்தார். இந்த வரிசையில் விவேக் மரணம் ஜீரணிக்கவே முடியாதது. இவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்த அனைவரும் கையில் ஒரு செடி வைத்திருந்தனர். விவேக் ஒரு லட்சம் மரம் நட்டவர். அதற்கு மக்கள் மரியாதை செய்தனர். இப்படிப் பல தலைவர்கள். 1996இல் இறந்தவர் உடலைக் குளிரூட்டும் பெட்டி வசதியை முதன்முதலாக அறிமுகம் செய்ததே நான்தான்" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+