விவேக்கின் "அந்த" கடைசி ஆசை.. இறுதிவரை நிறைவேறாமலேயே காற்றில் கலந்து விட்ட சோகம்!
நடிகர் விவேக் மறக்க முடியாத மாமனிதராக மண்ணில் தங்கிவிட்டார்
சென்னை: நகைச்சுவையே இன்று சரிந்து விட்டது.. நிறைவேறாத ஆசையுடன் தன் மூச்சையும் நிறுத்தி கொண்டது...!
சுமார் 30 வருட காலமாக தமிழக மக்களை, சிந்தனையாலும் சிரிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகர் விவேக்.. இந்த 30 வருடங்களில் விவேக்கின் பரிமாணங்கள் ஏராளமானவை.. இயல்பாகவே கிரியேட்டிவிட்டி என்பது இவருக்குள் பொதிந்து போயிருந்தது.
Recommended Video
அதை அடையாளங்கண்டு, மெல்ல மெல்ல வெளிக்கொணர்ந்தவர் கே.பாலசந்தர்.. எப்படி கமலை செதுக்கினோரோ, அப்படியேதான் விவேக்கையும் நம்பிக்கையுடன் செதுக்கினார்.. அபரிமிதமான எதிர்பார்ப்பை விவேக்மீது வைத்திருந்தார் கேபி.

மேதாவிகள்
அதனால்தானோ என்னவோ, கமலுக்கும் விவேக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.. இருவருமே ரசனைவாதிகள்.. இருவருமே மேதாவிகள்.. இருவருமே சிந்தனைவாதிகள்.. இருவருமே கேபியின் சீடர்கள்.. இருவருமே சமூக அக்கறை நிறைந்தவர்கள்.. இருவருமே எழுத்து சிற்பிகள்.. ரஜினி முதல் தனுஷ் வரை சேர்ந்து நடித்த விவேக், ஏனோ கமலுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை.. நடிக்க முடியவில்லை என்பதே உண்மை.

கிசுகிசுக்கள்
இவர்கள் 2 பேரும் ஏன் நடிக்கவில்லை என்பது ஒருகட்டத்தில் விவாதமாகவும் சினிமா உலகில் எழுந்தது.. கருத்து கமெடியனாக இருந்ததால் தானோ என்னவோ விவேக்கை கமல் ஒதுக்கிவிட்டார் என்ற கிசுகிசுக்கள் வலம் வந்தன.. வடிவேலுக்கு மட்டும் இத்தனை சான்ஸ் தரும்போது, கமல் நினைத்திருந்தால் விவேக்குக்கு எப்போதோ வாய்ப்பை தந்திருக்கலாமே? என்றும் முணுமுணுப்புகள் எழுந்தன.

ட்விட்டர்
இந்தியன் 2 படத்தில் விவேக் நடிப்பார் என்ற செய்திகள் வெளிவந்ததும்தான் அத்தனை அனுமானங்களும் நொறுங்கி விழுந்தன... "என்னுடைய ரொம்ப கால கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது... அந்தக் கனவு 'இந்தியன் 2' வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்' என்று தன் நீண்ட கால கனவு குறித்து ட்விட்டரிலும் தெரிவித்திருந்தார் விவேக்.

மெயின்டெயின்
எனினும், என்ன காரணத்தினாலோ கடைசி வரை இவர்கள் நடிக்கவே இல்லை.. ஒருமுறை இதை ஆதங்கமாகவே விவேக் ஒரு மேடையில் வெளிப்படுத்தி இருந்தார்.. கமல் சாருடன் இணைந்து நடிக்க 30 வருஷமா காத்திருக்கிறேன்.. இணைந்து நடிக்கவே இல்லை.. 30 வருஷமாகவே இப்படியே மெயின்டெயின் பண்றோம்.." என்றார். இதற்கு பிறகு என்னென்னவோ நடந்து முடிந்துவிட்டது..

கடைசி ஆசை
இன்று விவேக்குக்கு கமல் சொல்லி உள்ள இரங்கலில், "நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் விவேக் மீதான மொத்த அபிப்பிராயம், பாசத்தை கமல் இழையவிட்டுள்ளது புலப்படுகிறது. ஆனாலும், விவேக்கின் கடைசி ஆசை நிராசையாகவே காற்றில் கரைந்து விட்டது!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications