விழுப்புரத்தில் விழுந்த அடி.. தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா சுழற்றிய சாட்டை.. அடுத்தடுத்த அதிரடி
சென்னை: குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களைய ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவ வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து,
விரைவில் வடகிழக்கு பருவமழை கொட்ட போகிறது.. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு இப்போது கையில் எடுத்துவிட்டது. காரணம், சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, பெருங்களத்தூர் ரோடு, ஜிஎஸ்டி ரோடு, முடிச்சூர் ரோடு என பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது..

அதனால்தான், இந்த பகுதிகளில் எல்லாம், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிரடியான உத்தரவினை 4 நாட்களுக்கு முன்பு பிறப்பித்திருந்தார்.
மழைநீர் வடிகால்: நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மழைநீர் வடிகால் பணிகள், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் கல்வெட்டு தூர்வாரும் பணிகள் மற்றும் அனைத்து மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அப்போது உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், குடிநீரை மாசுபடுத்திய சம்பவமும், அதையொட்டி, பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும், இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததும், தமிழக மக்களை அதிர வைத்துவிட்டது. எனவே, இப்படி ஒரு நிகழ்வு இனி ஏற்படாதவாறு, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
குடிநீர் விநியோகம்: அதன்படி, "கடந்த வருடம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 60 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டன. இதற்காக மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்தது. எனவே குடிநீர் விநியோகம் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். உரிய துறை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து சேதமடைந்த, நீர்க் கசியும் குழாய்களை உடனடியாக கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் விநியோக உள்கட்டமைப்பு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கங்களிலும் தேக்கி வைக்கப்படும் நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் உறை அடுக்குகள் அமைக்கப்பட வேண்டும். பராமரிப்பு அறைகளில் மூடிகள் பொருத்தப்பட வேண்டும்.
மேல்நிலைத் தொட்டிகளும் தரைமட்ட நீர்த்தேக்கங்களும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும். குடிநீர்க் குழாய்கள், தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மாசுபாடு அடைவதற்கான காரணங்களை கண்டறிந்து, அதை சரிசெய்ய வேண்டும். நீர் மாசுபாடு தொடர்பான அபாயங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடிநீர் தொட்டி: மேல்நிலை தொட்டிகளிலும் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளிலும் தேக்கப்பட்ட நீரில் தேவையான அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து நீரின் தரத்தை பராமரித்து நீரை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நீரை சுத்தப்படுத்த குளோரின் பொடி நீரில் கலப்பதை உறுதிசெய்ய வேண்டும். குடிப்பதற்கு விநியோகிக்கப்படும் நீரில் கிருமிகள் கலந்துவிடாத வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
பல்வேறு மூலங்களில் இருந்தும் தண்ணீர் மாதிரிகளை எடுத்து, அதை பரிசோதனைக்கு உட்படுத்தி நீரின் தரம் உரிய மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
களப்பரிசோதனைக் கருவிகள் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை நீரின் தரத்தைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் தண்ணீர் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.
குடிநீர் பாதுகாப்பு: தமிழ்நாடு நீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிகப்படியான நீர் மாதிரிகளைச் சேகரித்து, நீரின் தரத்தைப் பரிசோதிக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீரின் தரம் குறித்தும், பாதுகாப்பான குடிநீரைப் பொது மக்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் களைய ஒரு வலுவான குறை தீர்க்கும் அமைப்பை நிறுவுதல் வேண்டும். குடிநீர் பிரச்சினை தொடர்பாக புகாரளித்தால் அவை சரியான நேரத்தில் தீர்க்கப்படுகிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
விரிவான அறிக்கை: மேற்குறிப்பிட்ட விரிவான நடவடிக்கைகளை வரும் 30ம் தேதிக்கு முன்பாக நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலருக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் முதன்மைச் செயலாளருக்கும் அளிக்க வேண்டும்" என்று சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications