சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜே சித்ரா இறந்தப்ப அதிமுக ஆட்சி! முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கையிருக்கு! லிஸ்ட் தரேன்.. ஹேமந்த்

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என விஜே சித்ராவின் கணவர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

ஆங்கர், விஜே, சீரியல் நடிகை, வெள்ளித்திரை நடிகை என உச்சத்தை அடைந்தவர் விஜே சித்ரா. போலீஸ்காரரின் மகள். அடையாற்றில் காவலர் குடியிருப்பில் நடுத்தர வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்.

3 அமைச்சர்கள்.. அப்பறம் உதயநிதி.. பக்கா பிளானோடு குதித்த திமுக! வடக்கிலிருந்து வந்த டாப் 3 அமைச்சர்கள்.. அப்பறம் உதயநிதி.. பக்கா பிளானோடு குதித்த திமுக! வடக்கிலிருந்து வந்த டாப்

இதையடுத்து விஜே துறை மேல் சித்ராவுக்கு ஈடுபாடு இருந்ததால் நிறைய டிவி நிறுவனங்களில் ஆடிஷனுக்கு சென்று வெறுங்கையை வீசிக் கொண்டே வெளியே வந்திருக்கிறார்.

அதிர்ஷ்ட காற்று

அதிர்ஷ்ட காற்று

இந்த நிலையில் ஒரு நாள் சித்ராவுக்கு அதிர்ஷ்ட காற்று வீசியதை அடுத்து அவர் விஜே ஆனார். சில தொலைகாட்சிகளில் முன்னணி ஷோக்களை தொகுத்து வழங்கினார். இதையடுத்து சின்னபாப்பா, பெரிய பாப்பா எனும் நகைச்சுவை சீரியலில் நடித்தார். பின்னர் சில சீரியல்களில் நடித்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அவருக்கு பெயரை பெற்று கொடுத்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

முல்லை என்றே பொதுமக்களின் மனதில் பதிந்து போனார். தனது கடுமையான உழைப்பு, விடா முயற்சி, உள்ளிட்டவற்றால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அது மட்டுமல்லாமல் யூடியூப் சேனல் மூலமும் இவருக்கு வருமானம் வந்தது. இதை கொண்டு திருவான்மியூரில் பெரிய பங்களாவை கட்டியுள்ளார்.

வசதியான வாழ்க்கை

வசதியான வாழ்க்கை

கார், வீடு, வாசல் என வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த சித்ராவுக்கு திடீரென போதாத காலம் வந்தது. ஹேமந்த் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் ஆனது. இருவரும் பதிவு திருமணமும் செய்து கொண்டதாக தெரிகிறது. இருவரும் ஈபிவியில் ஒரு ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இரு ஆண்டுகள்

இரு ஆண்டுகள்

அவர் இறந்து இரு ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் அவரது இறப்பு தொடர்பாக சித்ரா வீட்டாரால் குற்றம்சாட்டப்பட்ட ஹேமந்த் நேற்று முன் தினம் தனது உயிருக்கு ஆபத்து என போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறுகையில் சித்ராவின் மரணத்தில் 4 பேருக்கு தொடர்பு இருக்கிறது.

சித்ரா மரணத்தில் 4 பேருக்கு தொடர்பு

சித்ரா மரணத்தில் 4 பேருக்கு தொடர்பு

இவர்கள் கொடுத்த டார்ச்சரை சித்ராவே என்னிடம் சொல்லியுள்ளார். அரசியல்வாதி ஒருவர், சின்னத்திரை நடிகர், சென்னை தொழிலதிபர், போதை கும்பலை சேர்ந்த ஒருவர் என 4 பேருக்கு தொடர்பிருக்கிறது. அந்த 4 பேரும் யாரென எனக்கு தெரியும். நான் அவர்களுடைய பெயர்களை சொல்லிவிடுவேன் என்பதால் என்னை ஒரு கும்பல் மிரட்டிவருகிறது.

 தொந்தரவு

தொந்தரவு

என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் சித்ரா அவருக்கு யாரெல்லாம் தொந்தரவு கொடுத்தார்கள் என்ற பெயர் காவல் துறைக்கு போய்விடும் என ஹேமந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சித்ராவின் சாவிற்கு கூட வராத ஹேமந்த், இவற்றை எல்லாம் அன்றே காவல் துறை விசாரணையில் ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி இந்த பேட்டியை பார்த்தோருக்கு எழுந்திருந்தது.

முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை

முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை

இந்த நிலையில் அவர் நியூஸ் தமிழ் தொலைகாட்சி சேனலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் இருந்ததால் சில உண்மைகளை அப்போது போலீஸிடம் கூற முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. தற்போது சித்ரா மரணம் பற்றி உண்மைகளை கூற தயார், போலீஸ் அழைத்தால் யார் , யாரை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலையே தரவும் தயார் என ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

English summary
VJ Chithra's husband Hemanth says that he had big hope on CM Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X