சித்ரா மீது சந்தேகப்படவில்லை... இருவருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை - ஹேம்நாத் ஜாமீன் கோரி மனு
சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சித்ரா மீது நான் சந்தேகப்படவில்லை எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்று சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் இருக்கும் சொகுசு விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில் அவரது கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக தெரிய வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை, இது திட்டமிட்ட கொலை தான் என்று சித்ராவின் தாயார் உட்பட பல பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனிடையே, இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது. விசாரணையை முடித்த ஆர்.டி.ஓ திவ்யா, அறிக்கையை நசரத்பேட்டை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார். அதன் முடிவிலும், சித்ரா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணம் சரிவர தெரிய வரவில்லை. இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹேம்நாத் பண மோசடி வழக்கு ஒன்றில் சிக்கினார்.

பண மோசடி வழக்கு
மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாக கூறி ரூ.1.05 கோடி மோசடி செய்ததாக 2015ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது பண மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஹேம்நாத் மனு
சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தனக்கு எதிராக காவல் துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது என ஹேம்நாத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து வேறுபாடு ஏதுமில்லை
கடந்த ஆகஸ்ட் மாதம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடனும், தனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனத் தெரிவித்துள்ள ஹேம்நாத், எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹைகோர்ட்டில் விசாரணை
இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பதிலளிக்க இரு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பதில் தர நீதிபதி உத்தரவு
ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சித்ராவின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டார். பின், மனுவுக்கு ஜனவரி 18ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications