Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாந்தி வருதுனு சொன்னாலும் விடமாட்றாங்க.. என்னால முடியலை.. விஜே ஜாக்குலினின் பரபரப்பு "வாக்குமூலம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 நாட்களாக எழுந்திருக்கவே முடியலை, வாந்தி வருதுன்னு சொன்னாலும் விடாம கொடுமை செய்வதாக விஜே ஜாக்குலின் வெளியிட்ட ஒரு பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகைகளும் மிகவும் பிரபலமாக உள்ளார்கள். சீரியல் நடிகைகளை போல் தொகுப்பாளர்களுக்கும் ஃபேன்ஸ் நிறைய பேர் உள்ளனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் விஜேக்களாக இருக்கும் டிடி, கோபி, மகாபா ஆனந்த், பிரியங்கா, ரக்ஷன் வரிசையில் பிரபலமாக இருந்தவர் விஜே ஜாக்குலின்.

விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்தார். இவர் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் கோலமாவு கோகிலா, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

ஜாக்குலின் சீரியல்

ஜாக்குலின் சீரியல்

தற்போது ஜாக்குலின் சீரியல்களிலும் சரி படங்களிலும் சரி அவரை காணவில்லை. சரி டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறாரோ என நினைத்தால் அப்படி எதுவும் அவர் டிவியில் வந்ததாகவும் தெரியவில்லை. இந்த நிலையில்தான் ஜாக்குலின் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடற்பயிற்சி செய்யும் வீடியோ

உடற்பயிற்சி செய்யும் வீடியோ

அந்த வகையில் தனது சமூகவலைதள பக்கத்தில் ஜாக்குலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதை தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு வெளியிட்ட வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அவருடைய ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

சுத்தமாக முடியலை

சுத்தமாக முடியலை

அந்த வீடியோவில் ஜாக்குலின் கூறுகையில், வாக்குமூலமாக சொல்கிறேன். என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க. என்னால சுத்தமாக முடியவில்லை. மூச்சு வாங்குது. வாந்தி வருதுனு சொன்னாலும் போய் எடுத்துட்டுவா என்கிறார்கள். என் பிரச்சினையை யோசிக்கவே மாட்டேங்கிறாங்க. நுரையீரல் எல்லாம் வலிக்குது.

3 நாளா தூங்கி எழுந்திருக்கவே முடியல

3 நாளா தூங்கி எழுந்திருக்கவே முடியல

இதை சொன்னால் கூட இதெல்லாம் நார்மல்தான்னு சொல்றாங்க. 3 நாளா தூங்கி எழுந்திருக்கவே முடியலை. இப்போதைக்கு இவ்வளவுதான். மீதியெல்லாம் பார்ட் 2வில் சொல்றேன் என அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார். 65 கிலோ பளு தூக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஜாக்குலின். இவர் ஃபிட்டாகி புதுபொலிவுடன் ஜாக்குலின் மீண்டும் சீரியல் உலகில் கம்பேக் கொடுப்பாரா என ஆர்வமாக நிறைய பேர் காத்துக் கிடக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+