வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் வராவிட்டால் என்ன செய்வது? மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை: டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அரசு அதிகாரிகளும், கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளும் இந்தப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்கள் சமர்ப்பித்த எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அனைத்தும் பி.எல்.ஓக்கள் மூலம் வாக்காளர் சேவை பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

டிசம்பர் 4 ஆம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறும். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்து டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனைகள் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான நாள் முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இந்தப் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகும்.
இந்நிலையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து SIR பணிகள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் SIR படிவம் கொடுக்காவிடில் வரைவு பட்டியலில் பெயர் இருக்காது என்றும் 3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இடம்பெறாது என்றும் தெரிவித்துள்ளார்.
2002/ 2005 வாக்காளர் பட்டியலில் தனது பெயரோ அல்லது உறவினரின் பெயரோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை மட்டும் நிரப்பி SIR படிவத்தை ஒப்படைத்தாலும் அவர்களின் பெயர், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6 உடன் உறுதிமொழி படிவத்தை இணைத்து பட்டியலில் புதிதாக பெயரை சேர்க்க வேண்டும். வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிசம்பர் 9 - ஜனவரி 8 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications