ஏணியும் வேணாம்.. தென்ன மரமும் வேணாம்.. நோட்டாவிலேயே ஒரே குத்து! தமிழ்நாட்டில் ‘இங்கு’ தான் அதிகம்.!
சென்னை: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளி வந்திருக்கும் நிலையில், இந்தூரில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது நோட்டா. தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள், அதிகபட்சம், குறைந்த பட்சமாக நோட்டாவுக்கு விழுந்த தகவல் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் 18வது மக்களவைக்கான 543 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவைத் தேர்தல் ஆனது நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

400 மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என பிரதமர் நரேந்திர மோடியும் அந்த கட்சியின் முக்கிய தலைவருமான அமித் ஷாவும் கூறினர். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. 294 தொகுதிகளிலேயே பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கடும் போட்டி அளித்து வரும் இந்தியா கூட்டணி 220க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால் கூட்டணி கட்சிகளின் தயவிலேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. அதேபோல தனி கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜகவும் படுதோல்வியை சந்தித்துள்ளது. சிறிய கட்சிகள் சுயேச்சைகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றிருக்கின்றனர். அதே நேரத்தில் நோட்டாவுக்கும் தமிழகத்தில் அதிக வாக்குகள் கிடைத்து இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். தேசிய அளவில் 0.99 99 சதவீத அளவுக்கு நோட்டா வாக்குகள் கிடைத்து இருக்கிறது.
தமிழகத்தில் முதன் முதலாக 2013ஆம் ஆண்டு ஏற்காடு இடைத்தேர்தலிலும் 20.14 லோக்சபா தேர்தலிலும் நோட்டா வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் இடம் பெற்றது. தற்போதைய மக்களவைத் தேர்தலில் சுமார் 4.5 லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்றால் நோட்டா பட்டனில் தங்களது வாக்கை செலுத்தலாம். இதற்கு முன்பு 49 ஓ படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என வாக்காளர்கள் தெரிவிக்கலாம்.
ஆனால் தற்போது அதற்காகவே பிரத்தியேகமாக பட்டன் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் சராசரியாக பத்தாயிரம் நோட்டா வாக்குகள் விழுந்திருக்கிறது. அந்த வகையில் அரக்கோணம் - 12613, ஆரணி-9188, மத்திய சென்னை - 11163, வட சென்னை- 13208, தென் சென்னை - 15653, சிதம்பரம் - 8761, கோவை- 11788, கடலூர் - 7292, தர்மபுரி - 9198, திண்டுக்கல் - 22120, ஈரோடு - 13983, கள்ளக்குறிச்சி - 8532, காஞ்சிபுரம் - 16965, கன்னியாகுமரி - 3756, கரூர் - 8275, கிருஷ்ணகிரி - 10982, மதுரை - 11174 , மயிலாடுதுறை - 8695, நாகப்பட்டினம் - 8918, நாமக்கல் - 12984 வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதேபோல் நீலகிரி - 13000, பெரம்பலூர் - 10322, பொள்ளாச்சி - 14503, ராமநாதபுரம் - 6295, சேலம் - 14894, சிவகங்கை -8189, ஸ்ரீபெரும்புதூர்- 26450, தென்காசி - 17165, தஞ்சாவூர் - 12833, தேனி- 11336, தூத்துக்குடி - 9806, திருச்சிராப்பள்ளி - 13849, திருநெல்வேலி - 7396, திருப்பூர் - 7396, திருவள்ளூர் - 18978, திருவண்ணாமலை - 11957, வேலூர் - 8736, விழுப்புரம் - 8966, விருதுநகர் - 9408 என பதிவாகியுள்ளது.
அந்த வகையில் அதிகபட்சமாக டிஆர் பாலு வென்ற ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் 26,450 வாக்குகளும், திண்டுக்கல் தொகுதியில் 22,120 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்திருக்கிறது. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 3756 வாக்குகளும் ராமநாதபுரத்தில் 6295 வாக்குகளும் நோட்டாவுக்கு கிடைத்திருக்கிறது. விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த நிலையில் அங்கு சுமார் ஒன்பதாயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருப்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
கடந்த தேர்தலில் தமிழகத்தில் 5.50 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது. குறிப்பாக நீலகிரி தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் 46 ஆயிரத்து 559 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்திருந்தன. அது அப்போதைய வாக்குப்பதிவு சதவீதத்தில் 5% ஆகும். தற்போது அந்த அளவுக்கு இல்லையே எனினும் ஸ்ரீ பொதிம்புதூரில் 25 ஆயிரம் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல இடங்களில் நோட்டா நாம் தமிழருக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
-
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்!












Click it and Unblock the Notifications