சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கமல் ஹாசனின் பாட்டு பாடி வாக்கு சேகரித்த சீமான்.. பாஜகவை மொத்தமாக டேமஜ் செய்து பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை :பாரதிய ஜனதாவுக்கு ஒட்டுபோடுவதற்கு பால்டாயிலை குடித்துவிட்டு சாகலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

Recommended Video

    பாரதிய ஜனதாவுக்கு ஒட்டுபோடுவது பால்டாயிலை குடிப்பதற்கு சமம்.. சீமான் ஆவேசம் - வீடியோ

    சென்னை சூளைமேட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆயிரம் விளக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசும் போது,

    புஞ்சை உண்டு நஞ்சை உண்டு, பொங்கி வரும் கங்கை உண்டு,
    பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை.
    எங்க பாரதத்தின் சோத்துசண்டை தீரவில்லை.
    வீதிக்கு ஒரு கட்சியுண்டு. ஜாதிக்கு ஒரு சங்கம் உண்டு.
    நீதி சொல்ல மட்டும் இங்கு யாருமில்லை..

    எத்தனை காலம்

    எத்தனை காலம்

    வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
    யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
    ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
    வீடின்றி வாசலின்றி தவிக்குது
    எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
    கேள்வி கேட்கணும்னா, நீங்கள் விவசாயிகள் சின்னத்தில் ஓட்டு போட்டு என் தங்கச்சியை வெற்றி பெற வையுங்கள்.

    கொரோனா பாஜக

    கொரோனா பாஜக

    பாரதிய ஜனதாவுக்கு ஒட்டுபோடுவதற்கு பால்டாயிலை குடித்துவிட்டு சாகலாம்(சிரித்தார்). கொரோனாவை எப்படி சீமான் சமாளிக்கிறார். பாரதிய ஜனதா என்ற பெரும் வைரஸையே நாங்கள் சமாளிக்கிறோம். இதை சமாளிக்க முடியாதா? இந்திய நாட்டையே பிச்சைக்கார நாடாக்கிவிட்டார்கள். வளரும் நாடு பட்டியலிலேயே நாம் இல்லை. மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியை நம் நாடு சந்தித்து விட்டது. மீளவே முடியவில்லை. இதற்கு காரணம், பணம் செல்லாது அறிவிப்பும் ஜிஎஸ்டியும் தான் என்று உலக வங்கியே சொல்லியிருக்கிறது. இதை எதிர்த்து கடுமையாக சண்டை போட்ட ஒரேகட்சி தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தான்.

    யோகிஆதித்யாநாத்

    யோகிஆதித்யாநாத்

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் ஓழிச்சிருச்சா, அவங்கதான் அதிகமான மாநிலங்களில் ஆளுகிறார்கள். கல்வி வேலைவாய்ப்பில் தன்னிறைவு பெற்றுவிட்டார்களா? தடையற்ற மின்சாரம் வருகிறதா? கேளுங்கள். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இங்கு ஓட்டு கேட்டு வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் வெண்டிலேட்டர் இல்லாமல் எத்தனை குழந்தைகள் செத்துப்போச்சு. மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாமல் தரையில் மக்கள் படுத்துக்கிடக்கிறார்கள். ஒரு அம்மா குளுக்கோஸ்க்கு ஏற்ற ஸ்டாண்ட் இல்லாததால் கையில் பிடித்துக்கொண்டு ஒரு அம்மா நிற்கிறார். கீழே நோயாளி. ஒரு கை வலிக்குது, மறுகையில் மாற்றுகிறார். இதுதான் உத்தரப்பிரதேசத்தின் நிலை. இவர்கள் வந்து இங்கு பேசுகிறார்கள்.

    ஏணி வாங்க முடியவில்லை

    ஏணி வாங்க முடியவில்லை

    3000 கோடிக்கு வல்லபாய் படேல் சிலை எதற்கு.. பக்கத்திலேயே பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். குஜராத்தில் பள்ளியில் நிறையபேர் தீ பிடித்து செத்து போய்விட்டார்கள். தீயணைக்க முடியாத நிலையில் தீயணைப்பு வீரர்கள் இருந்தார்கள். தீயை தரையில் இருந்த அடித்தார்கள். தண்ணீர் வீணானது. ஏனெனில் ஏணி இல்லை. 3000 கோடிக்கு சிலை வைக்க தெரிந்தவர்களுக்கு 30000 கொடுத்த ஏணி வாங்க துப்பில்லை. இவர்கள் வளர்ச்சியை பற்றி பேசுகிறார்கள்.

    வெற்றிவேல் வீர வேல்

    வெற்றிவேல் வீர வேல்

    இவர்களின் வளர்ச்சி என்ன தெரியுமா? ஒரு அம்மா காரில் போகிறது. இடையில் சிக்னலில் ஒருவர் டொக்டொக் என்று தட்டி பிச்சை கேட்கிறார். அதற்க அந்த அம்மா பணம் இல்லை என்று இந்தியில் சொல்கிறார். உடனே அந்த பிச்சைக்காரர் உள்ளே இருந்து மிசினை எடுத்து ஆனலைன் பரிவர்த்னை செய்யுங்கள் என்கிறார். அந்த பெண்ணும் சிரித்துக்கொண்டே கார்டை ஸ்வைப் செய்கிறார். இதுதான் பாஜகவின் டிஜிட்டல் வளர்ச்சி, டெல்லியில் காமென்வெல்த் போட்டியின் போது 13000 பிச்சைக்காரர்கள் ஒரே ராத்திரியில் வேறு இடத்திற்கு கொண்டு போய் இறக்கிவிட்டார்கள். இப்போது எல்லா தவறுகளையும் இவர்களுக்கு மறைப்பது வேலை. ஜெய் ஸ்ரீராம் என்று சொன்னார்கள். இப்போது வேல் வேல் வெற்றிவேல் என்கிறார்கள். காரணம் யார்? நான் தான்" இவ்வாறு சீமான் ஆவேசத்துடன் பேசினார்.

    English summary
    naam tamilar coordinator seeman on thousand lights campaign: Voting for the BJP is equal to drinking bald oil and die.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X