“காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு செவ்வணக்கம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனது x தளத்தில் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் விடுத்திருக்கும் இரங்கல் செய்தியில், "காம்ரேட் வி.எஸ். அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் உணர்வுகளில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகரமான மரபை விட்டுச் சென்றிருக்கிறார்.

முன்னாள் முதலமைச்சரான அச்சுதானந்தன், மக்களின் அன்பைப் பெற்ற தலைவராகவும், வாழ்நாள் முழுவதும் கம்யூனிஸ்ட் கொள்கைப் பிடிப்புடனும் அரசியல் மற்றும் பொதுச் சேவை உணர்வுடன் வாழ்ந்திருக்கிறார்.
அவரது குடும்பத்தினருக்கும், சிபிஎம் தோழர்களுக்கும், மாபெரும் தலைவரின் இழப்பால் துயருறும் கேரள மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அமைச்சர் ரகுபதி, எனது சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் புகழ்பெற்ற தலைவர் அச்சுதானந்தனுக்கு அஞ்சலி செலுத்துவார். செவ்வணக்கம்" என்று கூறியுள்ளார்.
കേരളത്തിന്റെ രാഷ്ട്രീയ മനസ്സാക്ഷിയിൽ ആഴത്തിൽ പതിഞ്ഞ ഒരു വിപ്ലവ പാരമ്പര്യം സഖാവ് വി.എസ്. അച്യുതാനന്ദൻ അവശേഷിപ്പിക്കുന്നു.
— M.K.Stalin (@mkstalin) July 21, 2025
പ്രിയങ്കരനായ ജനനേതാവും, ആജീവനാന്ത കമ്മ്യൂണിസ്റ്റും, തത്ത്വാധിഷ്ഠിത രാഷ്ട്രീയത്തിന്റെയും പൊതുസേവനത്തിന്റെയും മൂർത്തിമദ്ഭാവമായിരുന്നു മുൻ മുഖ്യമന്ത്രിയായിരുന്ന… pic.twitter.com/GeGcYLT76h
அச்சுதானந்தன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ரூ.5.07 லட்சம் கோடி கடனில் கேரளா அரசு.. வெள்ளை அறிக்கையில் ‘திடுக்'.. தமிழகத்தை விட குறைவு தான் -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications