VS Babu health: விஎஸ் பாபு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. மருத்துவமனை வெளியிட்ட லேட்டஸ்ட் அறிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9ஆம் தேதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் லேட்டஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வி.எஸ்.பாபுவின் மருத்துவ அளவீடுகள் ஊக்கம் அளிக்கும் வகையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VS Babu Health Update Kolathur MLA Shows Significant Improvement Says Hospital

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு திணறலால் அனுமதிக்கப்பட்டவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிகிச்சையில் அளிக்கப்பட்டு வந்தாலும், வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில் வி.எஸ்.பாபு உடல்நிலை தொடர்பாக எம்.ஜி.எம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டமன்ற உறுப்பினர் வி. எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 9 ஆம் தேதி முதல் சென்னை MGM Healthcare மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து, தேவையான சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர். அவரது மருத்துவக் குறியீடுகள் சீராக உள்ளதுடன், உடல்நிலையில் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றமும் காணப்படுகிறது. தொடர்ந்து அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைத்து வருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+