வக்பு சொத்துக்கள் எந்த மாநிலத்தில் அதிகம்? தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்! முழு விவரம்
சென்னை: வக்பு சட்டத் திருத்த முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வக்பு சொத்துக்கள் எவ்வளவு இருக்கிறது? எந்த மாநிலத்தில் அதிகம்? தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளன.
வக்பு சொத்துக்கள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. ஒன்று 'வக்பு எஸ்டேட்' (Waqf Estate). இரண்டாவது 'அசையா சொத்து' (Immovable Property). இது எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு இருக்கிறது என்கிற விவரம்தான் தற்போது வெளியாகியுள்ளது.

வக்பு எஸ்டேட் என்பது, மத, கல்வி மற்றும் சமூக நல நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு பெரிய நிலத்தொகுப்பாகும். இதனை தனிநபரோ, சமூக அமைப்போ சமூக நல நோக்கத்திற்காக வழங்கியிருக்கும். இது முழுக்க முழுக்க வக்பு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதில் எந்த தனிபரின் தலையீடும் இருக்காது. இந்த சொத்தின் மூலம் வரும் வருவாய் மத மற்றும் சமூக சேவைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தர்காக்கள் போன்றவற்றை நிர்வகிக்க பயன்படும்.
வருவாய் சரியாக பயன்படுத்தப்படுகிறதா? முறைகேடு நடக்கிறதா? என்பதை மாநில வக்பு வாரியங்கள் மற்றும் மத்திய வக்பு கவுன்சில் ஆகியவை கண்காணிக்கின்றன.
ஆனால், 'அசையா சொத்து' என்பது இதிலிருந்து வேறுபட்டது. நிலம், கட்டடங்கள், வணிக வளாகங்கள் போன்ற மாற்ற முடியாத சொத்துகளைதான் அசையா சொத்துக்கள் என்று குறிப்பிடுகின்றனர். இவை வணிக, கல்வி உள்ளிட்டவற்றிற்கும், இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் வருவாய் உள்ளிட்ட விவகாரங்கள் தனிநபர் கண்காணிப்பில் இருக்கும். இதில் சொந்த உரிமையாளருக்கு தனிப்பட்ட வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications