48 வருடமாக தண்ணீரே குடிக்காமல் வாழும் உலக கோடீஸ்வரர் வாரன் பப்பெட்! மாற்றாக என்ன பண்ணுறார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக பெரும் முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பப்பெட் 48 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் குடிப்பதையே கைவிட்டுவிட்டாராம். ஒரு நாள் தண்ணீர் இல்லாமல் கூட உயிர்வாழ்வது கடினம் என்ற நிலையில், தண்ணீரே இல்லாமல் எப்படி அவரால் சமாளிக்க முடியும் என்று பலரும் ஆச்சர்யப்பட்ட நிலையில் தண்ணீருக்கு பதிலாக வேறு குளிர்பானங்களை மட்டுமே விரும்பி குடிப்பாராம். இது பற்றிய சுவாரசிய தகவலை பார்க்கலாம்.

உலக பெரும் பணக்கார்களில் ஒருவர் வாரன் பப்பெட். ஒரு லட்சம் கோடி டாலா் மதிப்புடைய 'பொ்கஷைர் ஹாத்வே' முதலீட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார். 96 வயதான வாரன் பப்பெட் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அப்பொறுப்பில் இருந்து விலகியிருந்தார். இவரைப்பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகிய் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Warren Buffett without drinking drops of water For 48 years Do you know what he drinks instead

48 ஆண்டுகளாக தண்ணீர் குடிப்பதில்லை

வாரன் பப்பெட் கடந்த 48 ஆண்டுகளாக தண்ணீரே குடிக்காமல் வாழ்ந்து வருகிறாராராம். ஒரு கிளாஸ் தண்ணீரை கூட குடிக்காமல் வாரன் பப்பெட் வசித்து வருகிறார். தண்ணீருக்கு பதிலாக தனக்கு மிகவும் பிடித்தமான 'செர்ரி கோக்' குளிர்பானத்தையே குடித்து வருகிறாராம்.

பிரபல கோடீஸ்வர முதலீட்டாளரும், ஹெட்ஜ் பண்ட் மேலாளருமான பில் அக்மேன், சமீபத்தில் 'ஈக்விட்டி மேட்ஸ் இன்வெஸ்டிங்' என்ற பாட்காஸ்டில் பங்கேற்றார். அப்போது வாரன் பப்பெட் உடன் இரவு விருந்தில் பங்கேற்றது குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அப்பொதுதான், இந்த சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டார். இது குறித்து பில் அக்மேன் கூறியதாவது:-

கோக், பெப்சி போன்ற குளிர்பானங்கள்

விருந்தின்போது வாரன் பப்பெட்டிடம் சாதாரண தண்ணீர் வேண்டுமா அல்லது மினரல் வாட்டர் வேண்டுமா என்று கேட்டேன். ஆனால், இரண்டையுமே மறுத்த வாரன் பஃபெட், தனக்கு குளிர்பானம்தான் பிடிக்கும். கடந்த 1970-களில் இருந்தே தண்ணீர் குடிப்பதில்லை என்றும், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தண்ணீரைத் தொடவில்லை என்றும் கூறினார்.

வாரன் பபெட்டுக்கு கோக் மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. இதனால் அவரது மகன் ஹோவர்ட் பபெட், அவரை செல்லமாக 'பெப்சி வாரன்' என்று அழைத்து வந்தாராம். பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் கிளென் அர்னால்டு தனது புத்தகத்திலும் இதுபற்றிய தகவலை எழுதியுள்ளார்.

வாரன் பப்பெட் பேச்சு

வாரன் பப்பெட் ஒருநாளைக்கு 5 கேன் கோக் குடிப்பார் என்றும் 50 ஆண்டுகளாக பெப்சி குடித்து வந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு 'பார்ச்சூன்' இதழுக்கு அளித்த பேட்டியில் வாரன் பப்பெட் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வாரன் பப்பெட் கூறியதாவது:- "எனது உடலில் கால் பங்கு கோகோ கோலாதான் உள்ளது. நான் ஒரு நாளைக்கு 2,700 கலோரிகள் உணவு எடுத்துக்கொள்கிறேன் என்றால், அதில் கால் பங்கு கோகோ கோலா மூலமாகவே கிடைக்கிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது 12 அவுன்ஸ் அளவு கொண்ட 5 கோகோ கோலா பாட்டில்களையாவது குடிப்பேன்" என்றார். முன்னதாக கடந்த 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் தனது நிறுவனத்தில் வருடாந்திர கூட்டத்திற்கான அதிகாரப்பூர்வ பானமாக 'செர்ரி கோக்' குளிர்பானத்தை அறிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் 48 ஆண்டுகளாக பெப்சி குடித்து வந்ததாகவும் தற்போது அதனை மாற்றியிருப்பதாகவும் கூறியிருந்தார். வெறும் குளிர்பானங்களை மட்டுமே 48 ஆண்டுகளாக குடித்து வருவதாக வாரன் பபெட் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+