"டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" - எடப்பாடி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் என பெருமை பேசும் தவெக அரசு, ஏழை, எளிய மக்களுக்காக மருந்தகங்களில் மாத்திரை, மருந்துகளை மலிவு விலையில் விற்பனை செய்ய என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா மருந்தகங்கள் செயல்பாட்டில் இருந்தன. இங்கு, மருந்து மாத்திரைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக இருதய நோய், இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களுக்கான மருந்து மாத்திரைகளின் விலை அதிகமாக இருக்கும் நிலையில், அம்மா மருந்தகங்கள் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்து மருந்து பொருட்களை விற்பனை செய்து வந்தன.

EPS Questions TVK Government

கடந்த திமுக ஆட்சி காலத்தில் இந்த திட்டம் முடக்கப்பட்டு, முதல்வர் மருந்தகம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் மருந்தகங்கள் அமைக்க, தனியாருக்கு மானியம் வழங்கப்பட்டு, அங்கு குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், அம்மா மருந்தகங்கள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தவெக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், 2014-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம் 'அம்மா மருந்தகங்களை' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.

தொடர்ந்து எனது தலைமையிலான அதிமுக அரசு, தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை விரிவாக்கம் செய்து, நோய்வாய்ப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிர்களைக் காத்தது. 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 'முதல்வர் மருந்தகம்' என்று பெயரை மாற்றி தனியாருக்கு வழங்கி, அம்மா மருந்தகங்களின் செயல்பாட்டை முடக்கியது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தவெக அரசும் இம்மருந்தகங்களை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில், தற்போதும் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களின் உயிர் காக்கும் மருந்துகளின் விலையில், நிர்ணயிக்கப்பட்ட 30 சதவிகித லாப வரம்பையும் தாண்டி விலை நிர்ணயம் செய்து விற்பதாக அகில இந்திய மருந்து நடவடிக்கை வலையமைப்பு என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வது மற்றும் இதர மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்த வழக்கு அக். 27-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி, மருத்துவமனைகளில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது குறித்த மத்திய, மாநில அரசுகளின் நிலையை தெளிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் ரூ. 10-ஐ அரசே உயர்த்தி வசூலிப்பதால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,200 கோடி முதல் ரூ. 1,600 கோடி வருமானம் ஈட்டும் என்று பெருமை பேசும் விஜய்யின் அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நோய்ப் பிணியைத் தீர்க்க, அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்த, அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து, தமிழக மக்களின் உயிர் காக்க முன்வருமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+