ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றவர் யார்? பெயரை சொல்லாத அமைச்சர் ராஜ்மோகன்.. அடுத்த சர்ச்சை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியை கைப்பற்ற தனக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க ஒருவர் முன் வந்ததாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியுள்ளார். இதனால் அமைச்சருக்கே நேரடியாக லஞ்சம் கொடுக்க முனைந்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனை ராஜ்மோகன் நிரூபித்து லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாராக அளிக்க வேண்டும் என்றும் குரல்கள் அதிகரித்துள்ளன.

அண்மையில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமனம் செய்யப்பட்டிருந்தார். புஷ்பவனம் குப்புசாமியின் நியமனத்திற்கு பல்வேறு கட்சிகளும் வரவேற்பு அளித்திருந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் இயல், இசை, நாடக மன்றத் தலைவர் விவகாரம் தொடர்பாக பேசியுள்ள கருத்து சர்ச்சையாகி இருக்கிறது.

Rajmohan

அதில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், இதற்கு முன் நான் யாரிடமும் சொல்லவில்லை.. தம்பி லயோலா மணிக்கு மட்டும்தான் தெரியும்.. இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள்.. அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ.5 கோடி கொடுக்கிறேன் என்று ஒருவர் பேசினார். அதற்கு நான் சிரித்து கொண்டே ரூ.500 கோடி கொடுத்தாலும், யாருக்கும் பொருத்தமில்லாத பதவியை கொடுக்க மாட்டோம்.

அந்த பதவிக்கு பொருத்தம் உள்ள புஷ்பவனம் குப்புசாமிக்கு ரூ.1 கூட வாங்காமல் நியமனம் செய்தோம். இதுவரை நான் வெளியில் சொன்னதில்லை. உங்களுக்கு செய்ய வேண்டியது எங்களின் கடமை.. அதேபோல் நெடுஞ்சாலை துறை என்றால் எப்படி இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு அமைச்சர் கூட்டம் போட்டு ஒப்பந்தத்தாரர்களிடம் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று சொன்னார்.

நீர்வளத்துறை, ஆவின் என்று அத்தனை அமைச்சர்களும் லஞ்சத்தை வெறுக்கிறார்கள். ஏனென்றால் இதுவும் ஒரு அறம். கை காசை போட்டு சேவை செய்ய வேண்டும் என்று நினைக்க கூடிய அறமிக்க அமைச்சரவையை விஜய் அமைத்துள்ளார் என்று பேசியுள்ளார். இதில் அமைச்சர் ராஜ்மோகன் ரூ.5 கோடி கொடுக்க முன் வந்தது யார் என்ற கேள்விக்கான பதிலை சொல்லாமல் கடந்து சென்றுள்ளார்.

அமைச்சருக்கே நேரடியாக லஞ்சம் கொடுக்க முன் வந்தது யார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. இதனால் ரூ.5 கோடி லஞ்சம் கொடுத்து இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவியை பெற முனைந்தது யார் என்பதை ராஜ்மோகன் வெளிப்படுத்த வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன. இது தவெகவில் புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+