டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு?
சென்னை: தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மது கடைகளில் மது பாட்டில்களின் விலை இன்று முதல் உயர்கிறது. பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா என அனைத்து வகையான மதுபானங்களின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் வரை ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் விலை உயர்ந்துள்ளது ஏற்கனவே எம்ஆர்பிக்கு மேலாக பாட்டில் கட்டணம் 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதுவும் எம்ஆர்பி விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. பாட்டிலை பயன்படுத்திய பிறகு திரும்ப ஒப்படைத்தால் அதற்கான பத்து ரூபாய் திரும்ப கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் விற்பனையில் BLACK PEARL BRANDY, OLD SECRET XXX RUM, HONIEY DAY BRANDY, OLD MONK DELUX RUM, TOP STAR SPECIAL BRANDY உள்ளிட்ட சாதாரண ரக மதுபான பிராண்டுகளே சுமார் 40 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

இந்த ரகத்தில் 180 மில்லி அளவுள்ள குவாட்டர் பாட்டிலின் பழைய விலை ரூ.140 ஆக இருந்தது. தற்போது ரூ.10 சேர்க்கப்பட்டு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 375 மில்லி அளவுள்ள ஹாப் பாட்டிலின் விலை ரூ.280-ல் இருந்து ரூ.290 ஆகவும், 750 மில்லி அளவுள்ள ஃபுல் பாட்டிலின் விலை ரூ.560-ல் இருந்து ரூ.570 ஆகவும் உயர்ந்துள்ளது.

மீடியம் ரக மதுபானம்
MAGNUS CHOICE VSOP BRANDY, POWER VODKA, TRIPLE CROWN VSOP BRANDY, SNJ NO.1 SUPER STRONG உள்ளிட்டவை மீடியம் ரக மதுபானங்களின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் 180 மில்லி குவாட்டர் பாட்டிலின் பழைய விலை ரூ.170. தற்போது இது ரூ.180 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், 750 மில்லி ஃபுல் பாட்டிலின் விலை ரூ.680-ல் இருந்து ரூ.690 ஆக உயர்ந்துள்ளது.

பிரீமியம் ரக மது
பிரீமியம் ரக மதுபானங்களான EL CANSO DARK RUM, OLD MONK PREMIUM XXX RUM, BRITISH EMPIRE, BACARDI CLASSIC SUPERIOR RUM, MORPHEUS BLUE XO BRANDY உள்ளிட்ட பிரீமியம் ரக மதுபானங்களின் விலையில் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ரகத்தில் 180 மில்லி குவாட்டர் பாட்டிலின் விலை ரூ.200-ல் இருந்து ரூ.210 ஆகவும், 750 மில்லி ஃபுல் பாட்டிலின் விலை ரூ.800-ல் இருந்து ரூ.810 ஆகவும் உயர்ந்துள்ளது.

உயர்ரக மதுபானம்
மேலும், சில உயர்ரக மதுபானங்களின் புதிய விலைகளும் புதிய விலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, 1000 மில்லி KONIGGEN PREMIUM FRENCH BRANDY விலை ரூ.1,770 ஆகவும், 1000 மில்லி HENRY X SPECIAL RESERVE BRANDY XO விலை ரூ.2,690 ஆகவும், 750 மில்லி MORPHEUS BLUE XO விலை ரூ.1,410 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப்பட்டியல்
புதிய விலைப்பட்டியலின் படி, மதுபானத்தின் ரகம் அல்லது குவாட்டர் முதல் ஃபுல் பாட்டில் என பாட்டிலின் அளவு எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 மட்டுமே கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தனியாக வசூலிக்கப்பட்டு வந்த பாட்டில் கட்டணத்தை எம்ஆர்பி விலையுடன் இணைத்திருப்பதே இந்த விலையேற்றுட்க்கான காரணம் எனவும், எனவே, நவம்பர் 1 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கும்போது புதிய MRP விலையையே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். பாட்டிலைத் திரும்ப ஒப்படைக்கும்போது ரூ.10 திரும்பப் பெறலாம் என டாஸ்மாக் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
