கிரெட்டா கார் இருக்கா? அதை வித்துட்டு.. ஆப்பிள் லேப்டாப் வாங்குங்கள்! இதுதாங்க எதிர்காலம்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர், ஆப்பிள் லேப்டாப் பற்றி பதிவிட்டிருக்கும் வீடியோ பரவலாக கவனம் பெற்றிருக்கிறது. வீடியோவில், கிரெட்டா காரை விற்றுவிட்டு ஆப்பிள் லேப்டாப்பை வாங்குங்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.
மோஹ்சின் என்ற இன்ஸ்டாகிராம் பயனர்தான் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அவர், ஆப்பிள் வெப்சைட்டுக்கு சென்று.. புதிய 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பில் உள்ள அனைத்து உயர் ரக வசதிகளையும் ஒவ்வொன்றாக தேர்வு செய்கிறார். லேப்டாப்பின் விலை தாறுமாறாக எகிறுகிறது.

இதை பார்த்த அவர்.. "சமீபத்தில் யாராவது கிரெட்டா கார் வாங்கியிருந்தால், அதை விற்றுவிட்டு.. இந்த புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை வாங்குங்கள்" என்று சிரித்துக்கொண்டே கூறியிருக்கிறார். அதாவது இந்தியாவை பொறுத்தவரை ஆப்பிள் லேப்டாப்பை வாங்கும் விலைக்கு ஒரு காரையே வாங்கிவிடலாம். அந்த அளவுக்கு ஆப்பிள் நிறுவனம் தனது லேப்டாப்பை மேம்படுத்துவதற்கு வசூலிக்கும் கட்டணம் மிக அதிகம்.
ஆப்பிளின் இந்த மேக்புக் புரோ லேப்டாப்பின் விலை, இந்திய மதிப்பில் ரூ.18 லட்சம் வரும். ஆனால் கிரெட்டா காரின் விலை ரூ.12.68 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. என்னதான் கார் பார்க்க பளபளப்பாக இருந்தாலும், அது நீண்ட காலத்திற்கு வரும் என்றாலும்.. அது பணத்தை உருவாக்காது. ஆனால் லேப்டாப் அப்படி இல்லை.
ஆப்பிளின் இந்த லேப்டாப்பில் அசுர வேக M5 மேக்ஸ் சிப் பொருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இது சாதாரண உபயோகத்திற்கான சிப் அல்ல. உலகின் அதிநவீன மற்றும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கு இணையான செயல்திறன் கொண்டது. இதில் மிக அதிகமான சிபியு மற்றும் ஜிபியு கோர்கள் உள்ளன. இதன் மூலம் மிக கடினமான 8K வீடியோ எடிட்டிங், 3டி வடிவமைப்பு மற்றும் அதிநவீன AI ஆராய்ச்சிகளை எளிதாக.. சில நொடிகளில் செய்துவிட முடியும்.
இந்த லேப்டாப்பில் ஆப்பிள் பெரிய சைஸ் ரேம் மெமரியை கொடுத்திருக்கிறது. சாதாரண லேப்டாப்களில் 8, 16 GB அளவுக்குதான் ரேம் இருக்கும். ஆனால் இதில், 128 GB ரேம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே நூற்றுக்கணக்கான ஹெவி சாப்ட்வேர்களை எளிதாக ரன் செய்ய முடியும். சேமிப்பு திறன் 8TB (8,000 GB) வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண லேப்டாப்களில் வெறும் 512 GB மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.
அதேபோல ஸ்கிரீனில் சிறப்பு கண்ணாடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு அதிகமாக வெளிச்சம் உள்ள பகுதியில் இருந்து வேலை பார்த்தாலும், அந்த வெளிச்சம் இந்த லேப்டாப்பின் ஸ்கிரீனில் எதிரொலிக்காது. சுருக்கமாக சொல்வதெனில்.. இந்த லேப்டாப்பை வைத்திருந்தால் ஹாலிவுட் திரைப்படங்களை கூட எடிட் செய்யலாம். நாசா போன்ற ஆராய்ச்சியாளர்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே காரைவிட இந்த லேப்டாப் வாங்குவது சிறந்த யோசனைதான். இது உங்களுக்கு பணத்தை கொடுக்கும். கார் கொடுக்காது என்பதைதான் அந்த இளைஞர் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
