சென்னை சாலைகளில் ராணுவ டாங்கிகள்.. போர் ஒத்திகைக்காக லாரிகளில் வந்து இறங்குகின்றன!
சென்னை: நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ள நிலையில், சென்னைக்கு ராணுவ டாங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் இரு நாடுகளும் ஏவுகணை சோதனை, எல்லையில் பாதுகாப்பு குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை நடைபெறுகிறது.
இந்திய எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல், போர் மற்றும் ஏவுகணை தாக்குதல் எதிரிகள் தாக்கும்போது பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும். அந்நாட்டினர் எல்லைக்குள் நுழைந்தால் சைரன் ஒலிப்பது, மின் தடை ஏற்பட்டால் எப்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த பயிற்சி என்பது பொது மக்களின் பாதுகாப்பை உள்ளடக்கியது. ஒருவேளை மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டால் தற்காத்து கொள்வது எப்படி என்பது குறித்தும் பயிற்சி நடத்தப்பட உள்ளது. போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது மற்றும் வெளியேற்றுவது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்னை விமான நிலையம், ஆவடி ராணுவ தளவாடம், மணலி பெட்ரோலிய நிறுவனம் ஆகிய நான்கு இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், போர் ஒத்திகைக்காக ராணுவ டாங்கிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெறும் போர் ஒத்திகைக்காக ராணுவ டாங்கிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. பூந்தமல்லி சாலையில் ராணுவ டாங்கிகள் லாரிகளில் அணிவகுத்த காட்சி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications